புக்கிட் மெர்தாஜாம்:
கடந்த மாதம் உள்நாட்டு நபரிடமிருந்து 400 ரிங்கிட் ரொக்க தொகையை திருடிய குற்றத்தை ஒப்புக் கொண்ட ஈரான் ஆடவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1500 ரிங்கிட் அபராதம் விதித்தது.
ஆங்கில மொழியில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கபட்டதை அடுத்து 40 வயதான அந்த ஆடவர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து மாஜிஸ்திரேட் நூருல் ரஷிடா இந்த அபராதத்தை விதித்தார்.
முன்னதாக செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கம்போங் க்ரோஸ் ஸ்டிரிட் பகுதியில் ஒரு வீட்டின் முன்புறம் இந்த ஆடவர் அக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குற்றவியல் சட்டம் பிரிவு 379 கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில் அபராத தொகையை செலுத்த தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் மாகிஸ்திரேட் உத்தரவிட்டார்.




