“இந்தியாவின் குடிமக்களாக நமக்கும் சில பொறுப்புகள் உள்ளன. இது மோடிக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.
இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாற்ற யாரெல்லாம் விரும்புகிறாரோ, அது யாராயினும்சரி, எந்த அரசியல் கட்சியாகவும் இருக்கலாம், தலைவராகவும் இருக்கலாம், அவர்கள் நாட்டின் நலனைக் கருதி பேச வேண்டும். அதனுடன் மக்களிடம் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த அவர்கள் வலியுறுத்த வேண்டும்.
நாம் எதையாவது வாங்க நினைத்தால், அப்போது ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும்: ஒரு இந்தியனின் வியர்வையால் தயாரான பொருள்களை நம் வாங்கப்போகிறோம் என்பதே அது.
இந்திய மக்களால் தயாரிக்கப்பட்ட எதுவானாலும்சரி, இந்திய மக்களின் அறிவாற்றலைப் பயன்படுத்தி உருவான எதுவானாலும், இந்திய மக்களின் வியர்வையால் விளைந்த எதுவானாலும், அவையெல்லாம் நமக்கு ‘சுதேசியே’. ‘உள்ளூருக்கு முக்கியத்துவம்’ என்ற தாரக மந்திரத்தை பின்பற்ற நாம் தயாராக வேண்டும்” என்றார்.