இலங்கையில் இன்று (05) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சூரை மீன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட ஒரு டின் சூரை மீனின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை
அதே சமயம் 425 கிராம் எடை மற்றும் 280 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட டின் மீனின் விலை 510 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட ஒரு டின் ஜாக் மெக்கரல் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாயாகவும், 425 கிராம் டின் மீனின் விலை 600 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள டின் மீன் வகைகளை இந்த விலைகளை விட அதிக விலையில் விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

