Last Updated:
பாதுகாப்புத் துறையில் இந்தியா வெறும் வாங்கும் நாடாக இருக்க விரும்பவில்லை என்றும் வெளிநாட்டு தளவாட விற்பனை நிறுவனங்களுக்கான சந்தையாக மட்டும் நாம் இருக்க முடியாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று கடற்படைக் கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி, கடல்சார் வலிமை இல்லாமல் எந்த நாடும் பெரிய சக்தியாக மாற முடியாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘துனகிரி’ என்ற போர்க்கப்பல், ‘சன்ஷோதக்’ என்ற ஆய்வுக் கப்பல் மற்றும் ‘அக்ரே’ என்ற நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல்களின் சேவையை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, கடந்த சில ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறினார். 45 பெரிய கடற்படைத் கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.


