• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘விக்ரம் சிப்’ அறிமுகம்: செமிகண்டக்டர் ஒரு டிஜிட்டல் வைரம் என பிரதமர் மோடி பெருமிதம் | Launch of indigenously manufactured Vikram Chip PM Modi hails

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘விக்ரம் சிப்’ அறிமுகம்: செமிகண்டக்டர் ஒரு டிஜிட்டல் வைரம் என பிரதமர் மோடி பெருமிதம் | Launch of indigenously manufactured Vikram Chip PM Modi hails
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பொருளா​தார சுயநலம் காரண​மாக பல்​வேறு தடைகள் இருந்​த​போ​தி​லும், இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) 7.8 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது என பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்​பின் வரி விதிப்பு குறித்து மறை​முக​மாக விமர்​சிக்​கும் வகை​யில் பிரதமர் இவ்​வாறு பேசி​ய​தாக கூறப்​படு​கிறது.

டெல்​லி​யில் மூன்று நாட்​கள் நடை​பெறவுள்ள செமி​கான் இந்​தி​யா-2025 மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

சில நாட்​களுக்கு முன்​பாகத்​தான் இந்த ஆண்​டின் முதல் காலாண்​டுக்​கான மொத்த உள்​நாட்டு உற்​பத்தி தரவு​கள் வந்​துள்​ளன. மீண்​டும் ஒரு​முறை இந்​தியா ஒவ்​வொரு எதிர்​பார்ப்​பை​யும், ஒவ்​வொரு மதிப்பீட்​டை​யும் விஞ்சி சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளது. பொருளா​தார சுயநலத்​தால் உரு​வாக்​கப்​பட்ட சவால்​கள் காரண​மாக உலக பொருளா​தா​ரங்​கள் ஆட்​டம் கண்​டுள்​ளன. இந்த நிச்​சயமற்ற சூழ்​நிலை​யிலும் இந்​தியா 7.8 சதவீத வளர்ச்​சியை சாத்​தி​ய​மாக்​கி​யுள்​ளது கவனிக்​கத்​தக்​கது.

இந்​தி​யா​வின் தற்​போதைய பொருளா​தார வளர்ச்சி வேகம் நீடித்​தால் உலகின் மூன்​றாவது பெரிய பொருளா​தா​ர​மாக மாறு​வதற்​கான கனவு விரை​வில் நிறைவேறும்.

20-ம் நூற்​றாண்​டைப் பொருத்​தவரை​யில் நிலக்​கரி மற்​றும் கச்சா எண்​ணெய் வளம்​தான் அசைக்​க​ முடியா சக்​தி​யாக இருந்து அதனை வடிவ​மைத்​தது. ஆனால், 21-ம் நூற்​றாண்​டின் உண்​மை​யான சக்தி செமிகண்​டக்​டர்​கள் தான்.

கடந்த நூற்​றாண்​டில் உலகின் தலை​விதி எண்​ணெய் கிணறுகளுடன் பிணைக்​கப்​பட்​டிருந்​தது. தற்​போதைய நூற்​றாண்​டின் தலை​விதி என்​பது சிறிய சிப்​பில் குவிந்​துள்​ளது. அளவில் சிறிய​தாக இருந்​தா​லும் உலகின் முன்​னேற்​றத்தை வேக​மாக இயக்​கும் வலிமை அதில் பொ​திந்​துள்​ளது. இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​படும் சிப் ஒரு நாள் உலகின் மிகப்​பெரிய மாற்​றத்​துக்​கான சக்​தியை அளிக்​கும்.

நாம் தாமத​மாகத் தொடங்​கி​னாலும் இப்​போது நம்மை எது​வும் தடுக்க முடி​யாது என்​பதே உண்​மை. இந்​தி​யாவை உலகம் தற்​போது மதிக்​கிறது, நம்​பு​கிறது. இந்​தி​யா​வுடன் சேர்ந்து செமிகண்​டக்​டர் எதிர்​காலத்தை உரு​வாக்க உலகம் தயா​ராக உள்​ளது. இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

விக்​ரம்​-32 சிப்: செமி​கான் இந்​தியா மாநாட்​டின் நேற்​றைய தொடக்க விழா​வின்​போது முற்​றி​லும் உள்​நாட்​டில் உரு​வாக்​கப்​பட்ட விக்​ரம்​-32 பிட் சிப்பை பிரதமர் மோடி​யிடம் மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்பு துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் வழங்​கி​னார்.

அப்​போது, “எண்​ணெய் கருப்பு தங்​கம் என்​றால், செமிகண்​டக்​டர் ஒரு டிஜிட்​டல் வைரம்” என்று பிரதமர் மோடி தெரி​வித்​தார்.

விக்​ரம்​-32 சிப் விண்​வெளிப் பயணங்​களுக்​காக முழு​மை​யாக உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட 32-பிட் மைக்​ரோபி​ராசசர் ஆகும். இது ராக்​கெட் ஏவுதல் மற்​றும் விண்​வெளி சூழல்​களின் தீவிர தன்​மை​களை தாங்​கும் வகை​யில் சண்​டிகரில் உள்ள இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி அமைப்​பின் (இஸ்​ரோ) செமிகண்​டக்​டர்​ ஆய்​வகத்​தால்​ வடிவ​மைப்பு செய்யப்பட்டது.



Read More

Previous Post

சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு | Mitchell Starc retires from T20Is

Next Post

வெள்ள நீர் ஓர் ஆசீர்வாதம், சேமித்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை | Flood water is a blessing save it Pakistani minister sparks controversy

Next Post
வெள்ள நீர் ஓர் ஆசீர்வாதம், சேமித்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை | Flood water is a blessing save it Pakistani minister sparks controversy

வெள்ள நீர் ஓர் ஆசீர்வாதம், சேமித்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை | Flood water is a blessing save it Pakistani minister sparks controversy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin