• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உலக பாரம்பரிய சின்னமாக 11 மராட்டிய கோட்டைகள் | 11 Maratha forts as World Heritage Sites

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
உலக பாரம்பரிய சின்னமாக 11 மராட்டிய கோட்டைகள் | 11 Maratha forts as World Heritage Sites
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ம​கா​ராஷ்டி​ரா​வின் 11 மராட்டிய கோட்​டைகளை, உலக பாரம்​பரிய சின்​னம் பட்​டியலில் யுனெஸ்கோ சேர்த்​துள்​ளது.

உலகம் முழு​வதும் பழங்​கால கட்​டிடங்​களை ஆய்வு செய்து உலக பாரம்​பரிய சின்​ன​மாக யுனெஸ்கோ அறி​வித்து வரு​கிறது. அதன்​படி மகா​ராஷ்டிர மாநிலத்​தில் ஆட்சி செய்த மராட்​டிய மன்​னர் சத்​ரபதி சிவாஜி ஆட்சி செய்த 11 கோட்​டைகள் மற்​றும் தமிழ்​நாட்​டில் உள்ள செஞ்சி கோட்டை என மொத்​தம் 12 கோட்​டைகளை உலக பாரம்​பரிய சின்​ன​மாக அறிவிக்க வேண்​டும் என்று மத்​திய அரசு பரிந்​துரை செய்​திருந்​திருந்​தது.

இந்​நிலை​யில், பாரிஸ் நகரில் 47-வது உலக பாரம்​பரிய சின்​னம் தொடர்​பான கமிட்டி கூடி, பல்​வேறு நாடு​கள் பரிந்​துரைத்த சின்​னங்​கள் குறித்து ஆய்வு நடத்​தின. முடி​வில் இந்​தி​யா​வின் மராட்டிய ராணுவ நிலப்​பரப்பை வெளிப்​படுத்​தும் 11 கோட்​டைகள் மற்​றும் தமிழகத்​தின் செஞ்சி கோட்​டையை உலக பாரம்​பரிய சின்​ன​மாக யுனெஸ்கோ அறி​வித்​தது.

மகா​ராஷ்டி​ரா​வில் மராட்​டியர்​கள் ஆட்சி காலத்​தில் ராணுவத்தை பலப்​படுத்​தும் வகை​யில் பல இடங்​களில் பாது​காப்​பான கோட்​டைகள் கட்​டப்​பட்​டுள்​ளன. அவை 17-ம் நூற்​றாண்​டில் இருந்து 19-ம் நூற்​றாண்டு கால கட்​டத்​தில் மலை, கடலோரம், நிலம் என பல இடங்​களில் கட்​டப்​பட்​டுள்​ளன. இவை ஒவ்​வொன்​றும் மராட்​டிய மன்​னர்​களின் ராணுவத் திறனை வெளிப்​படுத்​துகின்​றன.

மராட்​டிய சாம்​ராஜ்ஜி​யத்தை பாது​காக்​க​வும், வர்த்தக வழித்​தடத்தை கட்​டுப்​பாட்​டுக்​குள் வைத்​துக் கொள்​ள​வும் இந்த கோட்​டைகள் கட்​டப்​பட்​டுள்​ளன. மகா​ராஷ்டி​ரா​வில் சால்ஹேர், ஷிவ்னேரி, லோஹகட், கான்தேரி, ராய்கட், ராஜ்கட், பிரதாப்கட், ஸ்வர்ணதுர்க், பன்ஹாலா, விஜயதுர்க், சிந்துதுர்க் ஆகிய கோட்​டைகளை மராட்​டியர்​கள் கட்​டி​யுள்​ளனர். அத்​துடன் தமிழ்​நாட்​டில் உள்ள செஞ்சி கோட்​டை​யும் தற்​போது உலக பாரம்​பரிய சின்​னம் பட்​டியலில் இடம்​பிடித்​துள்​ளது.

இந்​தக் கோட்​டையை சில காலம் மராட்​டிய மன்​னர் சத்​ரபதி சிவாஜி தனது கட்​டுப்​பாட்​டில் வைத்​திருந்​தார். எதிரி​களின் படையெடுப்​பில் இருந்து பாது​காத்​துக் கொள்ள இயற்​கையை பயன்​படுத்​திக் கொள்​ளும் புத்​தி​சாலித்​தனம், நீர் தேக்க அமைப்​பு​கள், வலிமை​யான சுவர்​கள் போன்​றவற்​றுடன் பலத்த பாது​காப்​புடன் மராட்​டிய கோட்​டைகள் கட்​டப்​பட்​டுள்​ளன. இவை எல்​லாம் மராட்​டியர்​களின் ராணுவ திறமையை இன்​றும் பறை சாற்றி வரு​கின்​றன.

இதுகுறித்து யுனெஸ்கோ கூறுகை​யில், ‘‘2024-25-ம் ஆண்டு உலக பாரம்​பரிய சின்​னம் பட்​டியலில் சேர்க்க இந்​திய அதி​காரி​கள் முழு முயற்​சி​யுடன் ஆதா​ரங்​களை சமர்ப்​பித்​தனர். இந்​திய கோட்​டைகளின் வரலாறு, கலாச்​சார ஆதா​ரங்​களை முன்​வைத்​தனர். அவற்​றின் முக்​கி​யத்​து​வத்தை சமர்ப்​பித்​தனர். அவற்றை எல்​லாம் ஆய்வு செய்த பிறகு இந்​திய கோட்​டைகளுக்கு அங்​கீ​காரம் அளிக்​கப்​பட்​டது. இந்த அங்​கீ​காரம் இந்​தி​யா​வின் கோட்டை பாரம்​பரி​யத்​துக்கு உலகளா​விய முக்​கி​யத்​து​வத்தை அளிக்​கிறது. அத்​துடன், இந்த கோட்​டைகளை தொடர்ந்து பாது​காப்​ப​தற்கு மதிப்​பளிக்​கிறது’’ என்று தெரி​வித்​துள்​ளது.

யுனெஸ்​கோ​வின் அங்​கீ​காரத்​துக்கு இந்​திய வரலாற்று ஆய்​வாளர்​கள், பாரம்​பரிய நிபுணர்​கள், அரசு அதி​காரி​கள் வரவேற்பு அளித்​துள்​ளனர். யுனெஸ்​கோ​வின் முடிவு இந்​திய சுற்​றுலா துறைக்கு ஊக்​கமளிக்​கும். உள்​ளூர் மக்​களுக்கு பெருமை தேடித் தரும். அத்​துடன் வரலாற்று சிறப்​புமிக்க அந்​தப் பகு​தி​களை இன்​னும் முறை​யாக பராமரித்​து பாது​காக்​க வேண்​டும்​ என்​ப​தை உறு​திப்​படுத்​தும்​ என்​று தெரி​வித்​துள்​ளனர்​.



Read More

Previous Post

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

Next Post

இந்திய உறவை கெடுக்கும் போலி சமூக வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை | Iranian embassy warns of fake social media pages damaging India-Iran relations

Next Post
இந்திய உறவை கெடுக்கும் போலி சமூக வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை | Iranian embassy warns of fake social media pages damaging India-Iran relations

இந்திய உறவை கெடுக்கும் போலி சமூக வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை | Iranian embassy warns of fake social media pages damaging India-Iran relations

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin