Last Updated:
2027-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசை பட்டியல் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2 ஆண்டுகளில் சர்வதேச அணிகள் பெற்றுள்ள வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதும்.
அந்த வகையில் இதுவரை 3 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்துள்ளன. 2021-ல் நடந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், 2023-ல் நடந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் சாம்பியன் பட்டத்தை வென்றன. நடப்பு ஆண்டில் நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி முதன் முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், 2027-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசை பட்டியல் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 100% புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இலங்கை அணி 66.67% புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஏற்கனவே வகித்து வந்த நான்காம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி 46.67 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று தோல்வியை சந்தித்துள்ள இங்கிலாந்து அணி நான்காம் இடத்திற்கு சென்றுள்ளது. அந்த அணிக்கு 43.33 சதவீத வெற்றி புள்ளிகள் உள்ளன.
August 04, 2025 8:14 PM IST


