உலக சுகாதார நிறுவனம் இபோலா மருந்து குறித்து ஆராய்ந்தது – காணொளி
இபோலா நோய்க்கான பரிசோதனையில் இருக்கும் மருந்துகள் குறித்து ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனம் ஆராய்ந்தது. அவை குறித்த சில ஆலோசனைகளையும் அது கூறியுள்ளது.
ஆனால், நோய் பரவத் தொடங்கி 6 மாதங்கள் ஆகியும், தமக்கு உதவுவதற்கு போதுமான அளவுக்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்ற கோபம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஏற்பட்டிருக்கிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் 1900 பேர் வரை இந்த நோயினால் இறந்திருக்கிறார்கள்.
பிபிசியின் லாரா வெஸ்ட்புரூக்கின் காணொளி.