• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 13, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி,இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்று வந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்த போட்டி இன்று பிற்பகலில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. தொடக்கம் முதலே இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், டிராவை நோக்கியே போட்டி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சற்றும் எதிர்பாரா வகையில், 58-வது நகர்த்தலில் டிங் லீரெனை (7.5 – 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் வலைதளத்தில், “உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இளம் வீரர் குகேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி இந்தியாவின் அதிகாரத்தை ஒரு சதுரங்க சக்தியாக முத்திரை குத்துகிறது. சபாஷ் குகேஷ்! ஒவ்வொரு இந்தியர் சார்பாகவும், நீங்கள் எதிர்காலத்தில் புகழ் பெற வாழ்த்துகிறேன்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “இது ஒரு வரலாறு மற்றும் முன்மாதிரி..! அவரது குறிப்பிடத்தக்க சாதனைக்கு குகேஷ்-க்கு வாழ்த்துகள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவே அவரது வெற்றி, சதுரங்க வரலாற்றின் வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.



Read More

Previous Post

தண்ணீரில் எரியும் அகல் விளக்கு அறிமுகம் – கோவையில் வரவேற்பு | water burning earthen diyas Introduction in coimbatore

Next Post

சர்வதேசத்தை மிரள வைத்த ஈழத்து சிறுமி : சதுரங்க போட்டியில் அபார சாதனை

Next Post
சர்வதேசத்தை மிரள வைத்த ஈழத்து சிறுமி : சதுரங்க போட்டியில் அபார சாதனை

சர்வதேசத்தை மிரள வைத்த ஈழத்து சிறுமி : சதுரங்க போட்டியில் அபார சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin