சீனா தனது வேகமான மாக்லேவ் தொடருந்துடன் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
இரண்டு வினாடிகளில் மணிக்கு 700 கி.மீ வேகத்தை குறித்த தொடருந்து எட்டியுள்ளது.
ஒரு நபர் தொடருந்து வருவதை உணரும் முன்பே அது அவரைக் கடந்து மறையும் அளவிலான வேகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாக்லேவ் பாதை
இந்தச் சோதனை 400 மீட்டர் (1,310-அடி) மாக்லேவ் பாதையில் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த வேகத்தை அடைந்த பிறகு தொடருந்தானது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

