ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 2-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. 29ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.
20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெறுகின்றன. இவற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த முறை கோப்பையை வெல்ல இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்படலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதியுள்ளனர்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் பின்னர் 2009இல் பாகிஸ்தானும், 2010ல் இங்கிலாந்தும் கோப்பையை வென்றன. 2012 இல் வெஸ்ட் இண்டீஸ், 2014 இல் இலங்கை, 2016இல் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலகக் கோப்பையை தன் வசப்படுத்தின.
2021 இல் ஆஸ்திரேலியாவும், 2022-ல் இங்கிலாந்து அணியும் சாம்பியன் பட்டம் வென்றது. இதுவரை உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் 8 முறை நடைபெற்றுள்ளது. இவற்றில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐசிசி கோப்பையை இந்தியா வென்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 தொடரில் இருந்து ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் உலகக்கோப்பை வென்று ஓய்வை அறிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)