• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள் 200 பேரில் அம்பானி முதலிடம் | Ambani tops list of 200 Indians in world s billionaires list

GenevaTimes by GenevaTimes
April 4, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள் 200 பேரில் அம்பானி முதலிடம் | Ambani tops list of 200 Indians in world s billionaires list
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உலகளாவிய பில்லியனர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. 100 கோடி டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.8,300 கோடி) மேல், சொத்து மதிப்பு கொண்டிருப்பவர்கள் பில்லியனர்கள் என்று வரையறுக்கப்படுகின்றனர்.

கடந்த மார்ச் மாத நிலவரப்படி, உலக அளவில் 2,781 பில்லியனர்கள் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 14.2 லட்சம் கோடி டாலர் ஆகும். இந்தியாவில் மட்டும் 200 பில்லியனர்கள் உள்ளனர். சென்ற ஆண்டில் அந்த எண்ணிக்கை 169 ஆக இருந்தது.

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்திய பில்லியனர்கள் வரிசையில், 116 பில்லியன் டாலர் (ரூ.9.62 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் கவுதம் அதானி (ரூ.6.97 லட்சம் கோடி), 3-வது இடத்தில் ஷிவ் நாடார் (ரூ.3.07 லட்சம் கோடி), 4-வது இடத்தில் சாவித்ரி ஜிண்டால் (ரூ.2.78 லட்சம் கோடி), 5-வது இடத்தில் திலிப் ஷங்வி (ரூ.2.2 லட்சம் கோடி) உள்ளனர்.

உலக அளவில்: உலகளாவிய பில்லியனர்கள் வரிசையில், லூயி உட்டான் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்த மதிப்பு 233 பில்லியன் டாலராக (ரூ.19.33 லட்சம் கோடி) உள்ளது.

2-வது இடத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் (ரூ.16.18 லட்சம் கோடி), 3-வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் (ரூ.16.10 லட்சம் கோடி) உள்ளனர். உலகளாவிய பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்திலும், கவுதம் அதானி 17-வது இடத்திலும் உள்ளனர்.

பில்லியனர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்கா (813 பில்லியனர்கள்), 2-வது இடத்தில் சீனா (473 பில்லியனர்கள்), 3-வது இடத்தில் இந்தியா (200 பில்லியனர்கள்) உள்ளன என்று போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.



Read More

Previous Post

இந்திய அணியின் பல வருட தேடலுக்கு விடை கொடுத்த தமிழர்.. “சுந்தரை போற்று”! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

உலகில் மொத்தம் எவ்வளவு தங்கம் இருக்கிறது? எந்த நாட்டிடம் அதிக தங்கம் இருக்கிறது என தெரியுமா?

Next Post
உலகில் மொத்தம் எவ்வளவு தங்கம் இருக்கிறது? எந்த நாட்டிடம் அதிக தங்கம் இருக்கிறது என தெரியுமா?

உலகில் மொத்தம் எவ்வளவு தங்கம் இருக்கிறது? எந்த நாட்டிடம் அதிக தங்கம் இருக்கிறது என தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin