Last Updated:
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெறும் 24 மணி நேரங்களில் அதிகபட்ச லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
ஒரே நாளில் கிட்டத்தட்ட 6 லட்சம் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்து லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெறும் 24 மணி நேரங்களில் அதிகபட்ச லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்து கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தை சனிக்கிழமை அன்று பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை கின்னஸ் உலக சாதனை ரெக்கார்டுகளில் பதிவு செய்யப்பட்டது.
ஜனவரி 20, 2025-ல் நிறுவனத்தின் இந்த அற்புதமான செயல்திறனுக்கு அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக LIC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் உள்ள 4,52,839 LIC ஏஜெண்டுகள் 5,88,107 லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளனர். வெறும் 24 மணி நேரத்திற்குள் இப்படி ஒரு சாதனையைப் படைத்து, ஆயுள் காப்பீட்டுத் துறையில் ஏஜெண்டுகளின் இந்தச் செயல்திறன் ஒரு புதிய உலகளாவிய பெஞ்ச்மார்க்கை உருவாக்கியுள்ளது.
“இது எங்களுடைய ஏஜெண்டுகளின் கடுமையான அர்ப்பணிப்பு, திறன் மற்றும் அயராத வேலைக்கான ஒரு வலிமையான அங்கீகாரமாக அமைகிறது. எங்களுடைய கஸ்டமர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு வழங்குவதற்கான எங்களுடைய நோக்கத்தின் ஆழமான ஒரு பொறுப்பை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது” என்று LIC நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சாதனை என்பது LIC MD மற்றும் CEO ஆன சித்தார்த்தா மொஹாந்தி எடுத்துள்ள முயற்சியின் விளைவாகும். அதாவது, ஜனவரி 2025 ‘மேடு மில்லியன் டே’ (Mad Million Day) அன்று ஒவ்வொரு ஏஜெண்டும் குறைந்தபட்சம் ஒரு பாலிசியை நிறைவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. அதை அடுத்து ஏஜெண்டுகள் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தி இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். இது குறித்துப் பேசிய சித்தார்த்தா மொஹாந்தி, மேட் மில்லியன் இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக மாற்றியதற்குத் தங்களுடைய அனைத்து கஸ்டமர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தக் கின்னஸ் சாதனை பிற இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் நிச்சயமாக ஒரு ஊக்கமாக இருக்கும் என்று நம்பலாம்.


