உலக அதிசயங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலை 30 நாடுகளை சேர்ந்த 110 மாடல் அழகிகள் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.
அவர்கள் தாஜ் மகாலை பார்வையிடும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இங்கிலாந்து, வங்கதேசம், வியட்நாம், பிரேசில், பிஜி, உகாண்டா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாடல்கள் பாரம்பரிய ஆடையில் தாஜ் மகாலை காண வருகை தந்தனர்.
28 ஆண்டுகளுக்கு பிறகு பன்னாட்டு அழகிப் போட்டியை (மிஸ் டீன் இண்டர்நேஷனல்) இந்தியா ஒருங்கிணைத்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த உலக அழகிகள் இந்தியாவின் அதிசயத்தை பார்வையிட்டனர்.

