ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை தங்கத்தின் விலை சுமார் 23% அதிகரித்துள்ளது. அதே நேரம் கடந்த ஆண்டில் 50%, மூன்று ஆண்டுகளுக்குள் 100%-மும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன, டாலர் பலவீனமடைந்ததாலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெடரல் ரிசர்வை மாற்றியமைக்கும் திட்டங்களை வெளியிட்டதாலும் சமீபத்தில் தங்கத்தின் விலை $3,400-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது. பொதுவாக தங்கத்தை பொறுத்த வரை இந்தியா சர்வதேச விலைகளை பின்பற்றுகிறது, எனவே முதல் முறையாக 10 கிராம் தங்கத்தின் விலை சமீபத்தில் ரூ.1 லட்சத்தை தாண்டியது. முன்னதாக 2024-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் குறிப்பிடத்தக்க வேகத்தில் தங்கத்தை வாங்கி குவித்து வந்தன.
குறிப்பிட்ட இந்த காலாண்டில் இந்த வங்கிகளின் தங்க கொள்முதல்கள் 333 டன்களாக உயர்ந்தன, இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆண்டு மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல்களை 1,000 டன்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் குறிப்பிட்டது. சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதிக்கு அவசியமானது என்பதால், பல நாடுகள் தங்களின் தங்க கையிருப்பை அதிகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு நாட்டின் கையிருப்பில் உள்ள தங்கமானது அந்நாட்டின் கடன் தகுதியை மேம்படுத்துவதோடு, உலகப் பொருளாதாரத்தில் அதன் வளர்ச்சியை எதிரொலிக்கிறது.
உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய தகவல்கள்படி, உலகளவில் தங்க இருப்பு அதிகம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இந்நாடு மொத்தம் 8,133.46 டன்கள், தோராயமாக 682,276.85 மில்லியன் மதிப்புள்ள தங்கத்தை இருப்பு வைத்துள்ளது. இது பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தங்க இருப்புக்கு கிட்டத்தட்ட சமமானது.
குறிப்பிடத்தக்க வகையில், 2024-ஆம் ஆண்டில் அதிகம் தங்கம் வாங்கிய போலாந்து,அதன் தங்க இருப்பை 89.54 டன்களாக உயர்த்தி இந்த பட்டியலில் உலகளவில் 10-வது இடத்தை பிடித்தது. இதனிடையே பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் உலக நாடுகளின்மத்திய வங்கிகள் தங்களின் தங்க இருப்பை அதிகரிக்கும் போக்கிற்கு ஏற்ப, இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அதன் தங்க இருப்பில் சுமார் 72.60 டன்களை சமீபத்தில் சேர்த்தது.
இதன் காரணமாக போலாந்திற்குப் பிறகு உலகளவில் இரண்டாவது பெரிய தங்கம் வாங்கிய நாடாக இந்தியா திகழ்கிறது, இதன் மூலம் நாட்டின் மொத்த தங்க இருப்பு 876.18 டன்னாக உயர்ந்துள்ளது. அதே நேரம் சீனாவும் தனது தங்க இருப்பை 44.17 டன் அதிகரித்து, பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் அதிக தங்கத்தை இருப்பு வைத்திருக்கும் டாப் 10 நாடுகள்:
1. அமெரிக்கா:
எக்கனாமிக் குரூப்பிங் – அதிக வருமானம்
தங்க இருப்பு (டன்கள்) – 8,133.46
தங்க இருப்பு (மில்லியன்) – 682,276.85
2. ஜெர்மனி:
எக்கனாமிக் குரூப்பிங் – அதிக வருமானம்
தங்க இருப்பு (டன்கள்) – 3,351.53
தங்க இருப்பு (மில்லியன்) – 281,143.57
3. இத்தாலி:
எக்கனாமிக் குரூப்பிங் – அதிக வருமானம்
தங்க இருப்பு (டன்கள்) – 2,451.84
தங்க இருப்பு (மில்லியன்) – 205,672.74
4. ஃபிரான்ஸ்:
எக்கனாமிக் குரூப்பிங் – அதிக வருமானம்
தங்க இருப்பு (டன்கள்) – 2,437.00
தங்க இருப்பு (மில்லியன்) – 204,428.20
5. சீனா:
எக்கனாமிக் குரூப்பிங் – மேல் நடுத்தர வருமானம்
தங்க இருப்பு (டன்கள்) – 2,279.56
தங்க இருப்பு (மில்லியன்) – 191,220.94
6. சுவிட்சர்லாந்து:
எக்கனாமிக் குரூப்பிங் – அதிக வருமானம்
தங்க இருப்பு (டன்கள்) – 1,039.94
தங்க இருப்பு (மில்லியன்) – 87,235.26
7 இந்தியா:
எக்கனாமிக் குரூப்பிங் – குறைந்த நடுத்தர வருமானம்
தங்க இருப்பு (டன்கள்) – 876.18
தங்க இருப்பு (மில்லியன்) – 73,498.28
8. ஜப்பான்:
எக்கனாமிக் குரூப்பிங் – அதிக வருமானம்
தங்க இருப்பு (டன்கள்) – 845.97
தங்க இருப்பு (மில்லியன்) – 70,964.60
9. நெதர்லாந்து:
எக்கனாமிக் குரூப்பிங் – அதிக வருமானம்
தங்க இருப்பு (டன்கள்) – 612.45
தங்க இருப்பு (மில்லியன்) – 51,375.79
10. போலாந்து:
எக்கனாமிக் குரூப்பிங் – அதிக வருமானம்
தங்க இருப்பு (டன்கள்) – 448.23
தங்க இருப்பு (மில்லியன்) – 37,600.03
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 28, 2025 4:08 PM IST

