நாட்டின் மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனமான இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL) சமீபத்தில், தனது “ஐகானிக் பிராண்ட்டான” தாஜ் ஹோட்டல்கள், பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் ‘உலகின் வலிமையான ஹோட்டல் பிராண்ட்’ என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி பிராண்ட் மதிப்பீட்டு அறிக்கையின்படி, வருடாந்திர ‘ஹோட்டல்கள் 50, 2024’ அறிக்கை உலகளவில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலிமையான ஹோட்டல் பிராண்டுகளை அங்கீகரிக்கிறது. இந்நிலையில், பிராண்ட் ஃபைனான்ஸ் ‘ஹோட்டல் 50, 2024’ அறிக்கையின்படி, தாஜ் அதன் பிராண்ட் மதிப்பில் 45% அதிகரித்து $545 மில்லியன் டாலர்களாக (ரூ.45,53,17,52,500) உயர்ந்து உலகின் வலிமையான ஹோட்டல் பிராண்டாக மாறியது.
உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பிராண்டாக தாஜ் தனித்து நிற்கிறது. 100க்கு 92.9 என்ற மேம்பட்ட பிராண்ட் ஸ்ட்ரென்த் இன்டெக்ஸ் (BSI) மதிப்பெண்ணால் AAA+ மதிப்பீட்டைப் பெற்றது, இது பிராண்ட் ஃபைனான்ஸ் வழங்கிய மிக உயர்ந்த பிராண்ட் ஸ்ட்ரென்த் ரேட்டிங் ஆகும். தாஜின் BSI மதிப்பெண் மூன்று புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து, விழிப்புணர்வு, பரிசீலனை, பரிந்துரை மற்றும் நற்பெயர் போன்ற பல்வேறு பிராண்ட் வலிமை அளவீடுகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளுடன், உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பிராண்டாகவும் தாஜ் தரவரிசையில் உள்ளது.
இதையும் படிக்க: SBI 5-வருட வரி சேமிப்பு FD: பொதுமக்களுக்கு வழங்கும் நம்ப முடியாத ரிட்டன்கள்!
IHCL-ன் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான புனித் சத்வால் கூறியதாவது, ஐகானிக் பிராண்டான தாஜ் அதன் 120-வது ஆண்டில் உலகின் வலிமையான ஹோட்டல் பிராண்டாக மீண்டும் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மூன்றாவது முறையாக இந்த அங்கீகாரத்தைப் பெறுகிறோம். இது உலக அளவில் இந்திய விருந்தோம்பலை வெளிப்படுத்தும் நூற்றாண்டு பழமையான பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும்.
இந்த சாதனை எங்கள் விருந்தினர்களின் நம்பிக்கை மற்றும் பாசத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மேலும், அரவணைப்பு மற்றும் நேர்மையான சேவையை வழங்குவதில் எங்கள் சக ஊழியர்களின் உறுதியான அர்ப்பணிப்பு, தாஜின் உண்மையான அடையாளமாகும் என்று கூறியுள்ளார். மேலும், விரைவான மற்றும் பொறுப்பான வளர்ச்சியை நிரூபித்ததன் மூலம், விருந்தோம்பல் துறையில் ஒரு நிலையான எதிர்காலத்தை மேம்படுத்துவதில் தாஜ் முன்னணியில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க:
கஸ்டம்ஸ் அதிகாரிகளை போல நடித்து பணம் பறிக்கும் கும்பல்கள்… எச்சரிக்கையாக இருப்பது எப்படி…???
சொகுசு ஹோட்டல்களின் செயினாக இருந்து வருவது தாஜ் ஹோட்டல்ஸ் மற்றும் இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட்டின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1902இல் ஜாம்செட்ஜி டாடாவால் நிறுவப்பட்ட, டாடா குழுமத்தின் ஒரு பகுதியாகும். மேலும், இந்த நிறுவனத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் 20,000 பேருக்கு மேல் வேலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
