கடந்த 11ம் தேதி நள்ளிரவில், பிரான்ஸ் நாடு முழுவதும் உள்ள Intermarché, Carrefour, Monoprix போன்ற முன்னணி சூப்பர்மார்க்கெட் பிராண்டுகளின் 700-க்கும் மேற்பட்ட கடைகளில் ஒரே நேரத்தில் இந்த விபரீதம் நடந்துள்ளது. இத்தாக்குதலில் முக்கியமாக வழக்கமாக ஐஸ்கிரீம்களையும், இறைச்சிகளையும் உறைய வைக்க வேண்டிய ஃப்ரிட்ஜ்கள் மற்றும் ஃப்ரீசர்களை ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்கள் இணைய வழியில் (Internet-connected systems) அதன் செட்டிங்குகளை மாற்றி, “டிஃப்ராஸ்ட்” (Defrost) சுழற்சியை கட்டாயமாக இயக்கினர். இதன் விளைவாக, நள்ளிரவில் சுமார் 6 மணி நேரம் அந்தப் பெட்டிகள் 50 டிகிரி செல்சியஸ் (122°F) வரை வெப்பமடைந்தன.


