Last Updated:
பிப்ரவரி 2025-இல் பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, பார்ட் டி வேவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பார்ட் டி வேவர் பிரதமர் நரேந்திர மோடியை உலகின் மிகச் சிறந்த மற்றும் உத்வேகமளிக்கும் தலைவர்களில் ஒருவர் என்று வெகுவாகப் பாராட்டியுள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்தியா – ஐரோப்பிய யூனியன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (India-EU FTA) தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.


