கசான்,
உலகின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தியாளர்களில் ஒன்றான கசான் ஹெலிகாப்டர் ஆலையினை (KHP) இன்று மாட்சிமை தங்கிய மலேசிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பார்வையிட்டார்.
தத்தர்ஸ்தான் (Tatarstan) குடியரசின் தலைவர் ருஸ்டாம் மின்னிகானோவ் உடன் சென்ற மன்னருக்கு, ஆலையின் பொது இயக்குநர் நிக்கோலை யகோவ்லெவ் அன்புடன் வரவேற்பு அளித்தார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பேரரசரின் இணை அமைச்சர் , வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தலைமைச் செயலாளர் மற்றும் மலேசியாவின் ரஷ்ய தூதர் ஆகியோரும் பங்கேற்றனர்.
பார்வையிட்டபோது ஆலையின் செயல்பாடுகள் குறித்து மன்னருக்கு விளக்கம் அளிக்கப்பட்டு, அசெம்ப்ளி பிரிவு மற்றும் கண்காட்சி மண்டபம் சுற்றி காட்டப்பட்டது.
மேலும், கசான் நிறுவனம் தயாரிக்கும் பல்வேறு வகை ஹெலிகாப்டர்கள், அதில் உயர் வசதிகளுடன் கூடிய Mi-38, போக்குவரத்து மற்றும் பிரீமியம் வடிவில் உள்ள Mi-8MTV-1 ஆகியனவும் பேரரசருக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.




