Last Updated:
பின்லாந்தின் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து, இந்தியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாட்டினருக்கு காலவரையின்றி வாழவும் வேலை செய்யவும் உரிமை வழங்குகிறது.
உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பின்லாந்து, தனித்துவமான வாழ்க்கைத் தரம், வலுவான சமூக நல அமைப்பு மற்றும் கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகள் ஆகியவற்றால் உலகளவில் பலரையும் ஈர்த்து வருகிறது. நாமும் அங்கு செல்லலாமா என நினைக்கும் இந்தியர்களுக்கான கட்டுரைதான் இது. பின்லாந்தில் என்னவெல்லாம் கிடைக்கும், குடியுரிமை பெறுவது சவாலானதா என்பன பற்றியெல்லாம் பார்க்கலாம்…
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து பின்லாந்து வரும் / வந்த திறமையான நிபுணர்களுக்கான செயல்முறையை, 2025 குடியேற்ற சீர்திருத்தங்களுக்குப் பிறகு அந்நாடு நெறிப்படுத்தியுள்ளது. இந்த நெறிமுறையானது ஐடி, சுகாதாரம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு மத்தியிலும் பின்லாந்தை அனைவருக்குமான இடமாக மாற்றியுள்ளது.
பின்லாந்தின் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து, இந்தியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாட்டினருக்கு காலவரையின்றி வாழவும் வேலை செய்யவும் உரிமை வழங்குகிறது. மேலும் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய பொது சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகின்றன. மேலும் ஷெங்கன் போன்ற பகுதிக்குள் சுதந்திரமாக பயணிக்கும் சுதந்திரத்தையும் வழங்குகிறது.

Finland
தற்காலிக குடியிருப்பு அனுமதிகளைப் போலன்றி, இது காலாவதியாகாது. எனினும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம். அதேசமயம் இதை பின்லாந்தின் குடியுரிமையுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. இதற்கென கடுமையான விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக புதிய குடியேற்ற விதிகளின் கீழ், குடும்பத்தினராக இருந்தால் இரண்டு ஆண்டுகள் பின்லாந்தி வசித்திருக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் குறைந்தது 21 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
பின்லாந்தில் டைப் A (தொடர்ச்சியான) குடியிருப்பு அனுமதியின் கீழ் நான்கு ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதியாக உள்லது. இது இந்தியாவிலிருந்து அங்கு சென்ற நாள் அல்லது அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. குறுகிய கால வேலைக்கான டைப் B (தற்காலிக) அனுமதிகளுக்கு இந்தக் காலகட்டத்தில் கணக்கிடப்படாது. கூடுதலாக, இந்த நான்கு ஆண்டுகளில் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு நீங்கள் பின்லாந்தில் வசித்திருக்க வேண்டும். விடுமுறை அல்லது வெளிநாட்டில் வேலை செய்வதற்கான அனைத்து விவரங்களையும் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
நிரந்தர குடியிருப்பு உரிமை இதை நேரடியாக கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், டைப் A அனுமதியைப் பெறுவதற்கு பொதுவாக நிதி மற்றும் தொழில்முறை ஸ்திரத்தன்மை தேவைப்படுகிறது.
வேலைவாய்ப்பு சார்ந்த விண்ணப்பம் செய்பவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் EUR 40,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41.3 லட்சம்) சம்பாதிக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தப்பட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவத்துடன் இருக்க வேண்டும். இதற்கு மாற்றாக, பின்னிஷ் அல்லது ஸ்வீடிஷ் மொழிகளில் C1-நிலை புலமையை மூன்று வருட பணி அனுபவத்துடன் வெளிப்படுத்துவதும் தகுதியை வலுப்படுத்தும்.

Finland
விண்ணப்பதாரர்களுக்கு எந்த குற்றப் பின்னனியும் இருக்க கூடாது. செல்லுபடியாகும் நிலையிலுள்ள மருத்துவ காப்பீடு மற்றும் தங்குமிடச் சான்று ஆகியவற்றை வழங்க வேண்டும். கடன்கள் எதுவும் இருக்க கூடாது. அரசாங்க உதவியை நம்பியிருக்க கூடாது.
இந்தியர்கள் பொதுவாக ஆரம்பத்தில் தற்காலிக குடியிருப்பு அனுமதி விண்ணப்பத்துடன் தொடங்க வேண்டும். பின்னர் பின்லாந்தில் நான்கு ஆண்டுகள் வசித்த பிறகு, நிரந்தர குடியிருப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான நடைமுறை முடிவடைய நீண்ட காலம் ஆகலாம் என்பதால், பின்லாந்து செல்ல நினைப்போர் அதற்கேற்றார் போல் திட்டங்களை வகுத்திடுங்கள். சரியான திட்டமிடல் இருந்தால் பின்லாந்து வழங்கும் அனைத்து வசதிகளையும் இந்தியர்கள் முழுமையாக அனுபவிக்க முடியும்!
October 21, 2025 7:36 AM IST
‘உலகின் மகிழ்ச்சியான நாடு’ பின்லாந்தில் நிரந்தர குடியுரிமை வேண்டுமா? இந்தியர்கள் செய்ய வேண்டிதென்ன?