Last Updated:
புகை மூட்டம் அதிகமாக இருந்ததாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், விமான பயணிகள் கடுமையாக சிரமம் அடைந்தனர்.
உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தொடர்ந்து, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புகை மூட்டம் அதிகமாக இருந்ததாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், விமான பயணிகள் கடுமையாக சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில், ஹீத்ரோ விமான நிலையம் 18 மணி நேரத்திற்கு மீண்டும் முழுமையாக செயல்படத் தொடங்கியதாக அந்நாட்டு விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் வசதிக்காக கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் கூறினர். இதனிடையே, ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் கால அட்டவணைப்படி இயக்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
March 23, 2025 7:45 AM IST
உலகின் பரபரப்பான ஹீத்ரோ விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய விமான சேவை.. அதிகாரிகள் அறிவிப்பு!


