Last Updated:
Top 10 Richest Families in the World 2025 | உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 6 சதவிகிதம் அபுதாபியில் உள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் சிட்டி இக்குடும்பத்திற்குச் சொந்தமானது.
புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள பில்லியனர்கள் குறியீட்டின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த வால்டன் குடும்பம் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
1962-ஆம் ஆண்டு ஆர்கன்சாஸில் சாம் வால்டன் வால்மார்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். தற்போது, உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் நிறுவனம் இதுதான். உலகம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியை ஆளும் அல் நஹ்யான் குடும்பம் உலகின் இரண்டாவது மிகவும் பணக்கார குடும்பம். இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 28 லட்சம் கோடி ரூபாய். உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 6 சதவிகிதம் அபுதாபியில் உள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் சிட்டி இக்குடும்பத்திற்குச் சொந்தமானது.
சவுதி அரேபியாவை ஆளும் அரச குடும்பம், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்கார குடும்பம். இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 17 புள்ளி 94 லட்சம் கோடி ரூபாய். உலகிலேயே அதிக லாபம் ஈட்டும் எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ, இக்குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அல் சவுத் குடும்பத்தில் சுமார் 15,000 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரம் மற்றும் பெரும் சொத்து 2,000 முக்கிய வாரிசுகளிடம் மட்டுமே குவிந்துள்ளது. கத்தாரை ஆளும் அல் தானி குடும்பம், உலகின் நான்காவது மிகவும் பணக்கார குடும்பம். இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 16 புள்ளியே 75 லட்சம் கோடி ரூபாய்.
கத்தார் நாடு, உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒன்று. ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவைத் தவிர்த்துவிட்டு கத்தாரிடம் எரிவாயு வாங்கத் தொடங்கியதால், இக்குடும்பத்தின் வருமானம் அசுர வேகத்தில் உயர்ந்தது. வோக்ஸ்வேகன், பார்க்லேஸ் வங்கி ஆகியவற்றில் பெரும் பங்குகளை வைத்துள்ளனர். உலகப்புகழ் பெற்ற அல் ஜசீரா செய்தி ஊடக நெட்வொர்க் கத்தார் அரச குடும்பத்தால் தொடங்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹெர்ம்ஸ் குடும்பம் உலகின் 5-வது பணக்கார குடும்பம். இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 15 புள்ளி 49 லட்சம் கோடி ரூபாயாகும். உலகின் மிகவும் மதிப்புமிக்க ஆடம்பர பிராண்டான ‘ஹெர்ம்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் இவர்கள். உலகின் 6-வது பணக்கார குடும்பம் கோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள். இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 12 புள்ளியே 64 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்க அரசியலில் கோக் குடும்பத்தின் தாக்கம் மிகவும் அதிகம். டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் நிதி வழங்குகிறார்கள் இவர்கள்.
7-வது இடத்தில் இருப்பது உலகப்புகழ் பெற்ற சாக்லேட் மற்றும் உணவு நிறுவனமான மார்ஸ் குடும்பம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த ஸ்னிக்கர்ஸ் (Snickers), எம்&எம் (M&M’s) போன்ற பிராண்டுகளின் உரிமையாளர்கள்தான் இவர்கள். மார்ஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 12 புள்ளி 04 லட்சம் கோடி ரூபாய்.
8-வது இடத்தில் உள்ளது இந்தியாவின் அம்பானி குடும்பம். இந்தக் குடும்பம் மட்டுமே இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியக் குடும்பமாகும். இவர்கள் ஆசியாவின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 8 புள்ளி 87 லட்சம் கோடி ரூபாய். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு என மிகப்பெரிய பல்துறை ஜாம்பவானாக விளங்குகிறது அம்பானி குடும்பம். பிரான்ஸ் நாட்டின் வெர்தைமர் குடும்பம் 9-வது இடத்தையும், ராய்ட்டர்ஸ் நிறுவன உரிமையாளர்களான தாம்சன் ராய்ட்டர்ஸ் குடும்பம் 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.
உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய குடும்பம்..! | World’s Richest Families 2025


