• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உலகின் செலவு மிகுந்த நகரங்கள்: இந்தியாவில் மும்பைக்கு முதலிடம் | World Most costliest City Mumbai Tops in india mercer

GenevaTimes by GenevaTimes
July 4, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உலகின் செலவு மிகுந்த நகரங்கள்: இந்தியாவில் மும்பைக்கு முதலிடம் | World Most costliest City Mumbai Tops in india mercer
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: உலகின் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலை மெர்சர் நிதி ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியல் சம்பந்தப்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை செலவினம் அடிப்படையில் வெளியாகி உள்ளது.

பணவீக்கம், சர்வதேச பொருளாதார சூழல், உள்நாட்டு வரி, போக்குவரத்து, பொருட்களின் விலை போன்றவை செலவு கூடுவதற்கு முக்கிய காரணிகளாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சுமார் 226 நகரங்களை இதில் மெர்சர் பட்டியலிட்டுள்ளது.

அந்த வகையில் இந்த பட்டியலில் ஹாங்காங், சிங்கப்பூர், சூரிச், ஜெனிவா, பாஸல், பெர்ன், நியூயார்க், லண்டன், நாசாவ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. இந்த நகரங்கள் உலகின் செலவு மிகுந்த டாப் 10 நகரங்கள். அதே போல ஹவானா, விண்ட்ஹோக், டர்பன், துஷான்பே, பிளாண்டயர், கராச்சி (பாகிஸ்தான்), பிஷ்கெக், இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்), லாகோஸ் மற்றும் அபுஜா ஆகிய நகரங்கள் செலவு குறைந்த நகரங்களாக உள்ளன. ஆசிய அளவில் செலவு மிகுந்த நகரங்களாக ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் சியோல் உள்ளனர். இந்தப் பட்டியலில் 22, 25 மற்றும் 32-வது இடங்களில் இந்த நகரங்கள் உள்ளன.

இந்தியா: வழக்கம் போலவே இந்தப் பட்டியலில் செலவினம் அதிகம் உள்ள நகரமாக மும்பை முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் 136-வது இடத்தில் மும்பை மாநகரம் உள்ளது. இது தவிர டெல்லி (165), சென்னை (189), பெங்களூரு (195), ஹைதராபாத் (202), புனே (205), கொல்கத்தா (207) ஆகிய இடங்களில் உள்ளன.

இதில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மும்பை 11 இடங்களும், டெல்லி 4 இடங்களும், புனே 8 இடங்களும், கொல்கத்தா 4 இடங்களும் முன்வந்துள்ளன. சென்னை 5 இடங்களும், பெங்களூரு 6 இடங்களும் முந்தைய ஆண்டுடன் செலவினத்தில் பின்தங்கியுள்ளது.



Read More

Previous Post

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இன்று தாயகம் திரும்புகிறது: பிரதமருடன் காலை 11 மணிக்கு சந்திப்பு | Team India finally leaves Barbados

Next Post

அமெரிக்க அதிபர் போட்டியில் தொடர்வதாக ஜோ பைடன் தரப்பு அறிவிப்பு | Joe Biden announces he will continue in presidential race

Next Post
அமெரிக்க அதிபர் போட்டியில் தொடர்வதாக ஜோ பைடன் தரப்பு அறிவிப்பு | Joe Biden announces he will continue in presidential race

அமெரிக்க அதிபர் போட்டியில் தொடர்வதாக ஜோ பைடன் தரப்பு அறிவிப்பு | Joe Biden announces he will continue in presidential race

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin