கோலாலம்பூர் :
அமெரிக்காவில் நடைபெறும் ஃபுல்பிரைட் கற்பித்தல் சிறப்பு மற்றும் சாதனை (TEA) திட்டம் 2025 இல் கலந்துகொள்ள உலகின் சிறந்த 18 ஆசிரியர்களில் ஒருவராக மலேசியாவின் கணித ஆசிரியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செக்கோலா மெனெங்கா டெக்னிக் துவாங்கு ஜாஃபர் பள்ளியின் ஆசிரியரான லீ சாய் மெய், ஜார்ஜியா மாநில பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களுள் நடந்த கடுமையான தேர்வு செயல்முறையின் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட மலேசியாவின் ஒரே பிரதிநிதியாவார்.
“மலேசியாவைப் பிரதிநிதித்துப் பேசுவது எனக்குப் பெருமையைத் தந்துள்ளது, அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்றும், தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பிற்காக மலேசிய-அமெரிக்க கல்விப் பரிமாற்ற ஆணையத்திற்கு (MACEE) லீ தனது நன்றியைத் தெரிவித்தார்.


