Last Updated:
சர்வதேச போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் ஐபிஎல் ரெய்னாவுக்கு புதிய அடையாளத்தை பெற்று கொடுத்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள வருமான சுரேஷ் ரெய்னா உலகின் சிறந்த அணி வீரர்களை தேர்வு செய்துள்ளார். இதில் விராட் கோலி, எம். எஸ். தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு அவர் இடம் அளிக்கவில்லை.
இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழல் பந்து வீச்சாளரான சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 2005 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் 2010 ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா அறிமுகமானார். 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ரெய்னா 768 ரன்களையும் 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5 ஆயிரத்து 615 ரன்களும், 78 சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1605 ரன்களும் குவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் ஐபிஎல் ரெய்னாவுக்கு புதிய அடையாளத்தை பெற்று கொடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் முக்கிய வீரராக விளையாடி வந்தார். தோனிக்கு அடுத்தபடியாக சென்னை அணியில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட வீரராக மாறினார்.
ஐபிஎல் தொடரிலிருந்து அவர் ஓய்வு பெற்றாலும் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சிறந்த உலக அணியை அவர் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் விராட் கோலி, தோனி போன்ற இந்திய வீரர்களுக்கு அவர் இடம் வழங்கவில்லை. சுரேஷ் ரெய்னா தேர்வு செய்துள்ள உலகின் சிறந்த அணியில் 11 வீரர்களும் ஒரு இம்பேக்ட் ஆட்டக்காரரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் பிரைன் லாரா, சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், யுவராஜ் சிங், இயான் போத்தம், ஆண்ட்ரூ பிளின்டாஃப், ஷேன் வார்னே, ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, சக்லைன் முஸ்டாக் மற்றும் பால் ஆடம்ஸ் ஆகியோர் உள்ளனர், இவர்களில் பால் ஆடம்ஸ் இம்பேக்ட் ஆட்டக்காரர் ஆவார்.
July 19, 2025 7:09 PM IST


