உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை(sri lanka)முதலிடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
கோண்டே நாஸ்ட் டிராவலர் மற்றும் ரெமிட்லியின் குடியேற்ற குறியீட்டின்(Condé Nast Traveller and Remitly’s Immigration Index) புதிய அறிக்கையில், இலங்கை உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கை முதலிடம் பிடிக்க உதவிய காரணம்
கல்வித் தரம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவுகளை அடிப்படையாகக் கொண்ட தரவரிசையில்,வலுவான கல்வி மதிப்பெண் (0.7/1.0) மற்றும் வெறும் $354.60 வருடாந்த குழந்தை பராமரிப்பு செலவு அடிப்படையில் இலங்கை முதலிடத்தில் பிடிக்க உதவியது.
சுவீடன் மற்றும் நோர்வே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன, அதே நேரத்தில் அமெரிக்கா 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |