Last Updated:
ஜெர்மனி, ஸ்பெயின், பார்சிலோனாவில் உள்ள வானுயர தேவாலயம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இது கடைப்பிடிக்கப்படுகிறது.
மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நேற்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் மின் விளக்குகளை அணைத்து புவிநேரத்தை கடைப்பிடித்தனர்.
அந்தவகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈஃபிள் கோபுரத்தில் 5 நிமிடத்திற்கு மின்விளக்குள் அணைக்கப்பட்டன. ஹாங்காங்கில் புவிநேரம் கடைப்பிடிக்கப்பட்ட போது வானலாவிய கட்டடங்கள் இருளில் மூழ்கின. கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் உள்ள அக்ரோபாலிஸ் அரங்கிலும் மின் விளக்கு அணைக்கப்பட்டது. இதேபோன்று ஜெர்மனி, ஸ்பெயின், பார்சிலோனாவில் உள்ள வானுயர தேவாலயம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் புவிநேரம் கடைப்பிடிக்கப்பட்டது.
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே புவிநேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்கீழ் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று, உள்ளூர் நேரப்படி இரவு 8:30 முதல் 9:30 மணி வரை ஒரு மணிநேரம் அவசியமற்ற மின்விளக்குகளை அணைத்து வைக்கப்படும். மின்சாரத்தைச் சேமிப்பதற்கான விழிப்புணர்வாக மட்டுமில்லாமல், பூமியின் எதிர்காலத்தைக் காக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிகழ்வாக இது அமைந்துள்ளது.


