Last Updated:
புத்தாண்டு கொண்டாட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த டிரோன், பூஞ்ச் அருகே காதி கர்மதாவில் வெடி பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் வீசி பதற்றம் ஏற்படுத்தியது.
உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியபோது, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த டிரோன் ஒன்று வெடி பொருட்கள் மற்றும் போதை பொருட்களை வீசியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இந்நிலையில், உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே காதி கர்மதா என்ற இடத்தில் பாகிஸ்தானுக்கு சொந்தமான டிரோன், சுமார் 5 நிமிடங்கள் பறந்ததாக கூறப்படுகிறது.
மேலும், டிரோன் வழியாக, வெடிமருந்து, தோட்டாக்கள், போதைப் பொருட்களை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய எல்லைக்குள் டிரோன் பறப்பதை கண்டுபிடித்த இந்திய ராணுவம், உடனடியாக களத்தில் இறங்கி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டது.
#WATCH | Poonch, Jammu and Kashmir: Search operation underway by security forces after a suspected packet was found near the LoC in Poonch: PRO Defence Jammu
(Visuals deferred by unspecified time; no live operational details disclosed) pic.twitter.com/MeMFtKMk7y
— ANI (@ANI) January 1, 2026
இதனைத்தொடர்ந்து காதி கர்மதா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த இந்திய ராணுவம், பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கி உள்ளார்களா என தேடி வருகின்றனர். உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியபோது, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த டிரோன் ஒன்று வெடி பொருட்கள் மற்றும் போதை பொருட்களை வீசியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Jammu and Kashmir


