• Login
Tuesday, June 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உலகக் கிண்ணக் காற்பந்து சூதாட்டம்; 4 பேரின் தடுப்புக் காவல் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது!

GenevaTimes by GenevaTimes
June 30, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
உலகக் கிண்ணக் காற்பந்து சூதாட்டம்; 4 பேரின் தடுப்புக் காவல் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜார்ஜ் டவுன்:

உலகக் கிண்ணக் காற்பந்து (FIFA World Cup 2026) போட்டிகளை இலக்காகக் கொண்டு சட்டவிரோதச் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட ஒரு பெண் உட்பட நான்கு பேரைத் தொடர்ந்து போலீஸ் காவலில் (Remand) எடுத்து விசாரிக்கக் கோரிய விண்ணப்பத்தை இங்கேயுள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

29 முதல் 44 வயதிற்குட்பட்ட அந்த நான்கு சந்தேக நபர்களையும் மேலும் சில நாட்கள் காவலில் வைக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை விசாரித்த மஜிஸ்திரேட் நத்ரதுன் நைம் முகமட் சைட் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அந்த மூன்று ஆண்களும் வெளிநாட்டவர்கள் ஆவர்.

முன்னதாக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் அவர்கள் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, கெளுகோர் (Gelugor) பகுதியில் உள்ள ‘தி லைட் கலெக்ஷன் I’ (The Light Collection I) அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையின் போது இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

நடப்பு உலகக் கிண்ணக் காற்பந்து தொடரையொட்டி, சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டு வரும் ‘ஓப் சோகா XI’ (Op Soga XI) சிறப்பு நடவடிக்கையின் கீழ் பினாங்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 28 நபர்களில் இவர்களும் அடங்குவர்.

பினாங்கு மாநிலம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரையிலான காலக்கட்டத்தில் இச்சூதாட்ட ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் போலீஸார் 21 சோதனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதோடு, காற்பந்து சூதாட்டத்திற்காகச் செயல்பட்டு வந்த இரண்டு ரகசிய அழைப்பு மையங்களையும் (Call Centres) இதுவரை தகர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post உலகக் கிண்ணக் காற்பந்து சூதாட்டம்; 4 பேரின் தடுப்புக் காவல் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

Solar Panel | சோலார் பேனல் வைத்தால் கரண்ட் பில் கட்ட தேவையில்லையா? அரசு சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post

Tamilmirror Online || வட்ஸ்அப்பில் வரவுள்ள அதிரடி மாற்றம்: இனி தொலைபேசி எண் தேவையில்லை

Next Post
Tamilmirror Online || வட்ஸ்அப்பில் வரவுள்ள அதிரடி மாற்றம்: இனி தொலைபேசி எண் தேவையில்லை

Tamilmirror Online || வட்ஸ்அப்பில் வரவுள்ள அதிரடி மாற்றம்: இனி தொலைபேசி எண் தேவையில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin