Last Updated:
அரை இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நுழைய அதிக வாய்ப்புள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
நடப்புச் சாம்பியனான இந்திய அணி, 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைத் தொடரை அமெரிக்காவிற்கு எதிரான அபார வெற்றியுடன் மும்பை வான்கடே மைதானத்தில் மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது.
இந்தத் தொடரின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஜியோஸ்டாரில் வர்ணனை வழங்கி வரும் 46 கிரிக்கெட் நிபுணர்களில் 96 சதவீதத்தினர், இந்தியாவே மீண்டும் கோப்பையை வென்று வரலாறு படைக்கும் என்று ஒருமித்த கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
அனில் கும்ப்ளே, இர்ஃபான் பதான், பியூஷ் சாவ்லா, சபா கரீம் மற்றும் யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட முன்னணி முன்னாள் வீரர்கள் அனைவரும் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது உறுதி எனத் தங்களது கணிப்புகளைப் பகிர்ந்துள்ளனர்.
கடந்த 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களைத் தொடர்ந்து, இந்தியா தனது ஹாட்ரிக் வெற்றியை நோக்கிப் பயணிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து மோதப்போகும் அணி குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
நிபுணர்களில் 33 சதவீதம் பேர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறும் எனக் கருதுகின்றனர். அதேசமயம், 30 சதவீதத்தினர் 2024-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியைப் போலவே மீண்டும் இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதலை எதிர்பார்க்கின்றனர்.
அரை இறுதிச் சுற்றில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நுழைய அதிக வாய்ப்புள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
Feb 10, 2026 10:19 PM IST


