Last Updated:
ஹர்மன்ப்ரீத் தனது கையில் 2025 மற்றும் 52 ஆகிய எண்களையும் டாட்டூவாக குத்தியுள்ளார்.
மகளிர் உலகக்கோப்பையை வென்றதை இந்தியாவே கொண்டாடி வரும் நிலையில் இந்திய அணி கேப்டன் குத்தியுள்ள டாட்டூ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
இதையொடடி இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணி வீராங்கனைகளின் வெற்றிக் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்துள்ளன.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உலகக்கோப்பையை டாட்டூவாக தனது கையில் குத்தியுள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகியுள்ளது.
ஹர்மன்ப்ரீத் தனது கையில் 2025 மற்றும் 52 ஆகிய எண்களையும் டாட்டூவாக குத்தியுள்ளார். இது இந்திய அணி கோப்பையை வென்ற ஆண்டு மற்றும் ரன்கள் வித்தியாசத்தை குறிப்பதாக உள்ளது.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “என்றென்றும் எனது தோலிலும் என் இதயத்திலும் பதியப்பட்டுவிட்டது.
முதல் நாளிலிருந்தே உனக்காகக் காத்திருந்தேன். இப்போது ஒவ்வொரு காலையும் உன்னைப் பார்த்து நன்றி சொல்வேன்” என்று உணர்ச்சி பொங்கப் பதிவிட்டுள்ளார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :
November 05, 2025 5:07 PM IST


