Last Updated:
19 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள திவ்யா தேஷ்முக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உலகக்கோப்பை மகளிர் செஸ் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கொனேரு ஹம்பி மோதிய நிலையில் திவ்யா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
19 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள திவ்யா தேஷ்முக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஜார்ஜியாவில் நடைபெற்ற வரும் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதி யுத்தத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் கிராண்ட் மாஸ்டர் ஹம்பி மற்றும் சர்வதேச கிராண்ட் மாஸ்டரும் 19 வயதே நிரம்பிய இளம் வீராங்கனையுமான திவ்யா பலப்பரீட்சை நடத்தினர்.
இதன் இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் ஹம்பி -யும் கருப்பு நிற காய்களுடன் திவ்யாவும் களம் கண்டனர். ஆட்டத்தின் 34வது நகர்த்தலில் இருவரும் டிரா செய்ய ஒப்புக்கொண்டதால் போட்டி டைபிரேக்கரை நோக்கி நகர்ந்தது.
July 28, 2025 4:16 PM IST