Last Updated:
மகளிர் அணி பெற்று வரும் இந்த வெற்றிகள் இந்தியாவில் ஏராளமான இளம்பெண்கள் மத்தியில் விளையாட்டு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.
கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் அடுத்தடுத்து சாதனைப் படைத்த இந்திய வீராங்கனைகள் உலகக் கோப்பை கபடி தொடரிலும் வாகை சூடியுள்ளனர். 11 அணிகள் பங்கேற்ற 2வது உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.
இதில் ஈரானை வீழ்த்தி இந்தியாவும், வங்காளதேசத்தை வீழ்த்தி சீன தைபே அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில், முதலில் சீன தைபே அணி ஆதிக்கம் செலுத்தினாலும், சுதாரித்து ஆடிய இந்திய அணி புள்ளிகளை குவித்தது.
இறுதியில் 35க்கு28 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இந்திய மகளிர் அணி வாகை சூடியது. ஒரு நாள் கிரிக்கெட் மகளிர் உலகக் கோப்பை, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 உலகக் கோப்பை என ஒரே மாதத்தில் இரு உலகக் கோப்பைகளை வென்று சாதனைப் படைத்த இந்திய மகளிர் தற்போது, கபடியிலும் சாதனைப் படைத்துள்ளது.
இந்தக் கபடி உலகக் கோப்பை வெற்றி, இந்திய மகளிர் விளையாட்டுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. ஏனென்றால், ஒரே மாதத்தில் இந்திய மகளிர் அணிகள் மூன்று வெவ்வேறு உலகக் கோப்பைகளில் வாகை சூடியுள்ளன.
November 24, 2025 9:25 PM IST


