Last Updated:
அர்ஜெண்டினா இரண்டாவது இடத்தைப் பிடித்ததை கொண்டாட, விரைவில் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படும் என்றும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் சேவியர் மிலேய் அறிவித்துள்ளார்.
பிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், அர்ஜெண்டினா தோல்வியடைந்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல், அந்நாட்டு ரசிகர்கள் பியூனஸ் ஏர்ஸ் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அங்குள்ள ஒபெலிஸ்க் பகுதியில் திரண்டிருந்த ரசிகர்கள் இறுதிப் போட்டியை ஒன்றாகக் கண்டு ரசித்தனர். அர்ஜெண்டினாவின் தோல்விக்குப் பிறகு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
பின்னர் அனைவரும் ஒன்றுகூடி, தோல்விக்கு எதிராக முழக்கமிட்டனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியதால், காவல் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களைக் கலைத்தனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அர்ஜெண்டினா இரண்டாவது இடத்தைப் பிடித்ததை கொண்டாட, விரைவில் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படும் என்றும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் சேவியர் மிலேய் அறிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தோல்வி எதிரொலி: அர்ஜென்டினாவில் ரசிகர்கள் கலவரம்… தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்