Last Updated:
இந்தியாவில் விளையாட மறுத்தால், அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகளை வங்கதேசம் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மற்றும் அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்ட சூழலில் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க பிசிசிஐ உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஐசிசியிடம் வங்கதேசம் முறையிட்டது.
அதாவது, இந்தியா மற்றும் இலங்கையில் போட்டி நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி வங்கதேசம் விளையாடும் ஆட்டத்தை இலங்கையில் மட்டும் நடத்துமாறு வலியுறுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஐசிசி, அட்டவணைப்படி வங்கதேசம் இந்தியா வந்து விளையாடவில்லை என்றால், அந்த போட்டியில் தோற்றதாக கருதி புள்ளிகள் எதிரணிக்கு வழங்கப்படும் என எச்சரித்தது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்காக நாட்டின் கவுரவத்தை விலையாக கொடுக்க முடியாது என வங்கதேச விளையாட்டுத்துறை அமைச்சர் ஆசிஃப் நஸ்ருல் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டு வீரர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது எனக்கூறியுள்ள வங்கதேசம், தங்களுக்கான போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் விளையாட மறுத்தால், அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகளை வங்கதேசம் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது


