Last Updated:
இந்திய அணி மற்ற உலக அணிகளை விடவும் பலமானதாக இருப்பதால் இந்திய அணியே கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
இந்தத் தொடரின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாகக் கருதப்படும் ‘கேப்டன்கள் சந்திப்பு’ (Captain’s Day) நிகழ்வு, வரும் பிப்ரவரி 5, 2026 அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா உள்ளிட்டோர் பங்கேற்கும் 20 நாடுகளின் கேப்டன்களும் ஒரே மேடையில் தோன்றி ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள்.
உலகக்கோப்பைக்கான தங்களின் வியூகங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து அவர்கள் விரிவாகப் பேச உள்ளனர். இந்த நிகழ்வை இந்திய ரசிகர்கள் நேரலையில் காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் மூலமாகவும், இணையதளத்தில் ஜியோ-ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலி வாயிலாகவும் இந்த நிகழ்வை நேரலையாகக் காணலாம்.
உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டிகள் பிப்ரவரி 7 முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த கேப்டன்கள் சந்திப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடைபெறவிருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது.


