• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக்கோப்பை டி20-க்கு பின்னர் இந்திய அணி விளையாடும் போட்டிகள்… அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!

GenevaTimes by GenevaTimes
June 20, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
உலகக்கோப்பை டி20-க்கு பின்னர் இந்திய அணி விளையாடும் போட்டிகள்… அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடப்பாண்டு செப்டம்பர் முதல் அடுத்த வருடம் பிப்ரவரி வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையில் சேப்பாக்கத்தில் இரண்டு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்திற்கு எதிராக ஒரு டெஸ்ட், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டி 20 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  ஜூன் 29 ம் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி விளையாடும் போட்டி அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

அதன் படி வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். செப்டம்பர் 19 ம் தேதியிலிருந்து 2025 பிப்ரவரி 12 வரை போட்டி அட்டவணை தயார்நிலையில் உள்ளது. வங்கதேசம் அணியுடன் 2 டெஸ்ட் 3 டி20 போட்டிகளில் இந்தியா மோதுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 19 ம் தேதியிலிருந்து 23ம் தேதி வரை களைகட்டவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 27ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

விளம்பரம்

டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் அக்டோபர் 6,9,12 ம் தேதிகள் முறையே தரம்சாலா, டெல்லி, ஹைதராபாத் ஆகிய மைதாங்களில் மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. வங்கதேசம் அணியுடனான போட்டிகள் முடிந்தவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வருகிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு மைதானத்தில் அக்டோபர் 16 முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் புனேவில் 24 ம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் மும்பை வான்கிடேயில் நவம்பர் 1 ம் தேதியும் தொடங்குகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க – இந்திய அணியின் அடுத்த கோச் யார்? கம்பீருக்கு டஃப் கொடுக்கும் தமிழக முன்னாள் வீரர்

நியூசிலாந்து அணியுடனான போட்டிகள் முடிந்தவுடன் இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. இங்கிலாந்து அணியுடன் ஐந்து டி20 மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி 2025 ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

ஜனவரி 25,28,31 மற்றும் பிப்ரவரி 1 ம் தேதிகள் முறையே அடுத்தடுத்து நான்கு டி20 போட்டிகள் கொல்கத்தா, ராஜ்கோட், புனே, மும்பை ஆகிய மைதானங்களில் போட்டிகள் களைகட்டவுள்ளன.

விளம்பரம்

இதையும் படிங்க – ‘இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும்’ – ஸ்டீபன் ஃப்ளெமிங் கருத்து

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி, 6,9,12 ம் தேதிகளில் நாக்பூர், கட்டாக், அகமதாபாத் ஆகிய மைதாங்களில் நடைபெறுகின்றன.

.

Read More

Previous Post

’இந்தியா’வின் நம்பிக்கை நட்சத்திரம்… ராகுல் காந்தியின் பிறந்தநாள் இன்று!!! – News18 தமிழ்

Next Post

தீபிகா படுகோனேவின் கையை பிடிக்க போட்டிபோட்ட பிரபலங்கள் | Makkal Osai

Next Post
தீபிகா படுகோனேவின் கையை பிடிக்க போட்டிபோட்ட பிரபலங்கள் | Makkal Osai

தீபிகா படுகோனேவின் கையை பிடிக்க போட்டிபோட்ட பிரபலங்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin