Last Updated:
வங்கதேசம், T20 உலகக்கோப்பையில் பாதுகாப்பு காரணமாக போட்டி இடம் மற்றும் குருப்பு மாற்றம் கோரிக்கை; பிசிபி, ஐசிசி டாக்காவில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தங்களை வேறு குருப்புக்கு மாற்ற வங்கதேச அணி கோரிக்கை வைத்துள்ளது.
வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான அசாதாரண சூழல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதற்கு வங்கதேசம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
இதில் குருப் சி-ல் இருக்கும் வங்கதேசம் அணிக்கான போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்த போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச அணி கோரிக்கை வைத்துள்ளது. தங்கள் நாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதி போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற அந்த அணி நிர்வாகம் ஐசிசியிடம் வலியுறுத்தியது.
இதற்கு ஐசிசி மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியமான பிசிபி மற்றும் ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் அந்நாட்டு தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இதில், தங்களை குரூப் Bக்கு மாற்ற வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என வங்கதேசமற்றும் ஐசிசி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


