Last Updated:
உலகக்கோப்பை தொடர் இலங்கையிலும் நடைபெறுவதால், உள்ளூர் மைதானங்களின் தன்மைக்கேற்ப பந்துவீச்சு உத்திகளை வகுக்க இவர் உதவுவார்
யார்க்கர் ஸ்பெஷலிஸ்டான் லசித் மலிங்காவுக்கு இலங்கை அணியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு இலங்கை அணியைத் தயார்படுத்தும் நோக்கில், லசித் மலிங்காவை ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இந்த நியமனம் ஒரு குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் அதாவது டிசம்பர் 15 முதல் ஜனவரி 25, 2026 வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2014-ல் இலங்கை அணி டி20 உலகக்கோப்பையை வென்றபோது கேப்டனாக இருந்த மலிங்கா, சர்வதேச அளவில் 107 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர்.
குறிப்பாக, ‘டெத் ஓவர்களில்’ (Death Overs) அவர் வைத்திருக்கும் அபாரமான திறமை மற்றும் அனுபவத்தை இளம் வீரர்களுக்கு அளிப்பதுதான் இந்த நியமனத்தின் முக்கிய நோக்கமாகும்.
உலகக்கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் மலிங்கா இலங்கை பந்துவீச்சாளர்களுக்குப் பயிற்சி அளிப்பார்.
டி20 கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் மலிங்கா உலகப் புகழ்பெற்றவர் என்பதால் நுவான் துஷாரா, மதீஷா பதிரனா போன்ற மலிங்கா ஸ்டைலில் பந்துவீச்சாளர்களுக்கு இவரது ஆலோசனைகள் பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 உலகக்கோப்பை தொடர் இலங்கையிலும் நடைபெறுவதால், உள்ளூர் மைதானங்களின் தன்மைக்கேற்ப பந்துவீச்சு உத்திகளை வகுக்க இவர் உதவுவார் என்பது அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Dec 30, 2025 10:16 PM IST


