புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, கரும்பு, தென்னை, காய்கறிகள், மா, வாழைமற்றும் மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர் களுக்கு தேவையான உரங்கள் மாவட்டத்தில் இருப்பு வைக் கப்பட்டுள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான இரசாயன உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் ஆகியன தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


