புதிய விதிமுறைகளின் கீழ், தகுதிவாய்ந்த சிறப்பு மருந்துகள் மற்றும் மூலப் பொருட்களைச் சுங்கவரி யின்றி அனுமதிக்கக் கூடிய 20 அதிகாரவரம்புகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
அமெரிக்கா தனது சுங்க வரி விதிப்பைச் செப்டம்பர் 29 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரும் நிலையில் இந்த விலக்கு அமலுக்குவருகிறது.
அரிய நோய்களுக்கான மருந்துகள், மனித ரத்த பிளாஸ்மாகூறுகள், கருவுறுதல் மருந்துகள் மற்றும் நவீன புற்றுநோய் சிகிச்சைப் பொருட்கள் ஆகியவற்றுக்கு இந்த விலக்கு பொருந்தும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்திய மருந்து நிறுவனங்களுக்குத் தகுந்த நிவாரணம் கிடைக்கும்.
