• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் வெளியான புதிய தகவல்கள்

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் வெளியான புதிய தகவல்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோர் குறித்து புதிய தகவல்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவரை 3 சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


பிள்ளையானுடன் சிறையில் இருந்த ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவிப்பு 


இந்த சந்திப்புகளின் போது பேராசிரியர் குணரத்னவுடன் இரு பெண்கள் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பின்னர் நேரடியாக இலங்கை இராணுவத்தில் ‘மேஜர் தரத்துக்கு நியமிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் வெளியான புதிய தகவல்கள் | Easter Attacks Investigation Pillayan In Jail


தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் செய்னி மௌலவி மற்றும் மில்ஹான் ஆகியோரை பிள்ளையான் தான் இருந்த சிறை அறைக்கே அழைத்துச் சென்றதாக அந்தச் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.


அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்த போது எவராவது அருகில் சென்றால் பேச்சை மாற்றி விடுவார்கள் என்றும் சாட்சியாளரை கோடிட்டு, குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

சுரேஷ் சலே குறித்து மேலதிக விசாரணை


நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 2015 முதல் 2021 வரை பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்த அந்த காலப்பகுதியிலேயே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் வெளியான புதிய தகவல்கள் | Easter Attacks Investigation Pillayan In Jail



இதேவேளை, இந்த வழக்குடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் குறித்து மேலதிக விசாரணை அறிக்கையொன்றையும் குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மலேசிய வரலாற்றில் புதிய சாதனை: முதல் முறையாக வரி வருவாய் 200 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியது – பிரதமர் தகவல்! | Makkal Osai

Next Post

வரலாறு படைத்த CSK… ஐபிஎல்லில் இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் அணி! | IPL 2026 | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
வரலாறு படைத்த CSK… ஐபிஎல்லில் இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் அணி! | IPL 2026 | விளையாட்டு போட்டோகேலரி

வரலாறு படைத்த CSK... ஐபிஎல்லில் இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் அணி! | IPL 2026 | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin