
கம்பஹா, மிரிஸ்வத்த நகரின் மையத்தில் கொழும்பு-கண்டி சாலையில் உயர் மின்னழுத்த மின்கம்பி கம்பத்துடன் கூடிய மின்மாற்றி ஒன்று சரிந்து விழுந்ததில், சாலையில் பயணித்த ஒரு மோட்டார் வாகனம் சேதமடைந்து பலர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை (01) காலை 7 மணியளவில் மின்கம்பி கம்பம் திடீரென சரிந்து விழுந்தது. காயமடைந்தவர்கள் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, கொழும்பு-கண்டி சாலையில் மிரிஸ்வத்த, பெலும்மஹார மற்றும் யக்கல போன்ற நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, மேலும் மிரிஸ்வத்திலிருந்து கண்டி நோக்கி செல்லும் ஒரு பாதையை மூட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

