எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகங்களுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நேர அட்டவணை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

