• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“உன்னப்போல 1000 புருஷனை வைப்பேன்!” கர்ப்பிணி சொன்ன வார்த்தை.. ஆயுள் தண்டனை கணவனுக்கு நடந்த திருப்பம் | I’ll Have 1,000 Men Like You!’ Pregnant Wife’s Remark Takes an Unexpected Turn in Husband’s Life Sentence

GenevaTimes by GenevaTimes
July 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“உன்னப்போல 1000 புருஷனை வைப்பேன்!” கர்ப்பிணி சொன்ன வார்த்தை.. ஆயுள் தண்டனை கணவனுக்கு நடந்த திருப்பம் | I’ll Have 1,000 Men Like You!’ Pregnant Wife’s Remark Takes an Unexpected Turn in Husband’s Life Sentence
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Hema Vandhana

Time
Updated: Saturday, July 4, 2026, 12:50 [IST]

போபால்: உன்னை போல 1000 புருஷனை என்னால் வைத்துக்கொள்ள முடியும் என்று மனைவி ஒருவர் கணவரிடம் சொல்லி உள்ளார்.. இந்த வார்த்தைதான், ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது.. கோர்ட் வரை விஷயம் சென்றுள்ளது.. மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவமும் இதையொட்டி உத்தரவிடப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பும்தான் பொதுமக்களின் கவனத்தை இப்போது பெற்று வருகிறது.. அப்படி என்னதான் நடந்தது?

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சம்பவம் இதுவாகும்.. சின்வாரா மாவட்டம் சவுராய் பகுதியைச் சேர்ந்தவர் சிவா கஹார். இவருக்கும் கிரண் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.. கிரண் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

pregnant wife life sentence court verdict crime news murder case legal news

2021 செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் கணவன்-மனைவி இடையே திடீரென கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வெடித்துள்ளது.. கோபத்தின் உச்சத்துக்கே போன சிவா, கீழே கிடந்த கல்லை எடுத்து வந்து கிரணின் முகத்திலேயே ஓங்கி அடித்துள்ளார்.. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிரண், சம்பவ இடத்தியே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவியை கொன்ற கணவர்

மனைவியை கொன்றுவிட்டு, சிவா எங்கேயும் தப்பி ஓடவில்லை.. அவரே கிரணின் சொந்தக்காரர்களுக்கு போனை போட்டு விஷயத்தை சொன்னார்.. போலீசுக்கும் போன் செய்து, “நான் என் மனைவியைக் கொன்றுவிட்டேன்” என்று சொல்லி சரணடைந்தார். போலீஸார் கிரணை கைது செய்து விசாரணை நடத்தியபோது, “அவள் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டாள்” என்று சிவா வாக்குமூலம் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த சின்வாரா மாவட்ட நீதிமன்றம், சிவாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தண்டனையை எதிர்த்து சிவா மாநில உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் விவேக் அகர்வால் மற்றும் அவனிந்திர குமார் சிங் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனைவி கிரண் சொன்ன வார்த்தை

அப்போது அரசு வழக்கறிஞர், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்த நீதிமன்றத்தில் விரிவாக விளக்கினார்.. அதில், “கிரண் தன் கணவர் சிவாவிடம், ‘உன்னை போல 1000 கணவர்களை என்னால் வைத்திருக்க முடியும்’ என்று சொல்லி உள்ளார்..

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிவா, அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து மனைவியைத் தாக்கியிருக்கிறார்.. மேலும், இந்தச் சம்பவம் குறித்து அவரே போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். கிரணின் உறவினர்களையும் தொடர்புகொண்டு, தான் தன் மனைவியைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார்…

கொலை செய்யப்பட்ட கிரண் உயிரிழக்கும்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். போஸ்ட் மார்ட்டம் அறிக்கையின்படி அவரது முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன’ என்று அரசு வழக்கறிஞர் குற்ப்பிட்டார்.

உன்னைப் போல 1000 கணவர்கள்

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்தனர்.. அதில், “கிரண் தன் கணவனைப் பார்த்து, “உன்னைப் போல 1000 கணவர்களை என்னால் வைத்திருக்க முடியும்” என்று பேசியுள்ளார். இந்த வார்த்தை சிவாவை ஆத்திரமடைய செய்துள்ளது. ஒரு மனைவி தன்னுடைய கணவனைப் பார்த்து இப்படி பேசுவது, அந்த கணவனை அடியோடு குறைத்து மதிப்பிடுவதற்கும், எதற்கும் லாயக்கற்றவன் என மறைமுகமாகக் குறிப்பிடுவதற்கும் சமம்.

திட்டமிட்ட கொலை இல்லை

சிவாவுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கம் இல்லை.. அவர் திட்டமிட்டுச் செய்திருந்தால், அவரே போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்க மாட்டார். அதுமட்டுமல்ல கொலைக்கு அவர் எந்த ஆயுதத்தையும் தேடிப் போகவில்லை, சம்பவ இடத்தில் கீழே கிடந்த ஒரே ஒரு கல்லைத்தான் பயன்படுத்தியுள்ளார். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் கிரணின் உடலில் இருந்த மற்ற காயங்கள், அவர் தடுமாறி பாறைகள் மீது விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்றுதான் சொல்கிறது.

எதிர்பாராத தூண்டுதலால் ஒருவர் திடீரென ஆத்திரப்பட்டதால், சில சூழ்நிலைகளில் அது கொலையாக அல்லாமல் வேறு சட்டப்பிரிவின் கீழ் பரிசீலிக்கப்படலாம்.. அதனால் இந்த அம்சங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த சம்பவம் திட்டமிடப்படாத, ஆத்திரத்தால் மட்டுமே நிகழ்ந்துள்ளது.. எனவே இது “கொலையாகக் கருதப்படாத மரணத்தை ஏற்படுத்துதல்” என்ற சட்டப்பிரிவின் கீழ் வரும் என்பதால் சிவாவின் மீதான ஆயுள் தண்டனையை இந்த ஹைகோர்ட் ரத்து செய்கிறது.

ஆயுள் தண்டனை ரத்து – 7 வருட தண்டனை

அதற்குப் பதிலாக, சிவாவின் தண்டனையை 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையாகக் குறைத்து, 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.. ஒருவேளை சிவா இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், அவர் மேலும் ஒரு வருட காலம் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்று என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்..

மனைவியை கொன்ற கணவரின் ஆயுள் தண்டனையை, 7 வருட சிறையாக குறைத்த நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சட்ட வட்டாரங்களையும் தாண்டி, பொதுமக்களின் கவனத்தைட பெற்று வருகிறது.

English summary

I’ll Have 1,000 Men Like You!’ Pregnant Wife’s Remark Takes an Unexpected Turn in Husband’s Life Sentence

Read More

Previous Post

வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,645 ஆக உயர்வு | Makkal Osai

Next Post

இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு! சச்சினின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி..

Next Post
இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு! சச்சினின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி..

இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு! சச்சினின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin