• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உத்வேகம், நம்பிக்கை இல்லாமல் தவிக்கும் சிஎஸ்கே: தொடர்ச்சியாக 5-வது தோல்வியை சந்தித்தது | CSK suffers fifth defeat ipl 2025 lacking inspiration confidence explained

GenevaTimes by GenevaTimes
April 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
உத்வேகம், நம்பிக்கை இல்லாமல் தவிக்கும் சிஎஸ்கே: தொடர்ச்சியாக 5-வது தோல்வியை சந்தித்தது | CSK suffers fifth defeat ipl 2025 lacking inspiration confidence explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 103 ரன்​கள் மட்​டுமே எடுத்​தது.

சேப்​பாக்​கம் மைதானத்​தில் சிஎஸ்கே அணி சேர்த்த குறைந்​த​பட்ச ஸ்கோ​ராக இது அமைந்​தது. மேலும் நடப்பு சீசனில் சிஸ்​கேவுக்கு இது 5-வது தொடர்ச்​சி​யான தோல்​வி​யாக​வும், சேப்​பாக்​கத்​தில் ஹாட்​ரிக் தோல்​வி​யாக​வும் அமைந்​தது. ஐபிஎல் வரலாற்​றில் சிஎஸ்கே அணி 5 ஆட்​டங்​களில் தொடர்ச்​சி​யாக தோல்வி கண்​டது இதுவே முதன்​முறை.

நடப்பு சீசனில் 6 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள சிஎஸ்கே ஒரு வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​கள் மட்​டுமே பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. சிஎஸ்​கேவுக்கு இன்​னும் 8 ஆட்​டங்​கள் மீதம் உள்​ளன. இதில் குறைந்​த​பட்​சம் 6 முதல் 7 ஆட்​டங்​களில் வெற்றி பெற்​றால் மட்​டுமே பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பு கிடைக்​கும்.

சிஎஸ்​கே​வின் தொடர்ச்​சி​யான தோல்வி​களுக்கு முன்​வைக்​கப்​படும் விமர்​சனங்​களில் முதன்​மை​யாக இருப்​பது பேட்​டிங்​கில் டாப் ஆர்​டரிலும், நடு​வரிசை​யிலும் களமிறங்​கும் வீரர்​கள் தங்​களது உச்​சகட்ட பார்மை இழந்​தவர்​களாக உள்​ளனர் என்​பது​தான். நடு​வரிசை​யில் ராகுல் திரி​பா​தி, ஷிவம் துபே, விஜய் சங்​கர், தீபக் ஹூடா ஆகியோர் நடப்பு சீசனில் உயர்​மட்ட செயல்திறனை வெளிப்​படுத்​த​வில்​லை.

கடந்த காலங்​களில் தொடக்க வீர​ராக களமிறங்​கும் வீரர்​கள் சிறந்த அடித்​தளத்தை அமைத்து கொடுப்​பார்​கள். அதை பின்​பற்றி 3-வது மற்​றும் 4-வது இடங்​களில் களமிறங்​கும் வீரர்​கள் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு பலம் சேர்த்​தனர். ஆனால் இந்த சீசனில் டாப் ஆர்​டரிடம் இருந்து எந்​த​வித தாக்​கத்தை ஏற்​படுத்​தும் ஆட்​ட​மும் வெளிப்​பட​வில்​லை. ராகுல் திரி​பா​தி, தீபக் ஹூடா, விஜய் சங்​கர் ஆகியோர் தங்​களுக்கு கிடைத்த பொன்​னான வாய்ப்​பு​களை எட்டி உதைத்​துள்​ளனர் என்​பதே ரசிகர்​களின் ஆதங்​க​மாக உள்​ளது. திரி​பாதி 4 ஆட்​டங்களில் விளை​யாடி 46 ரன்​களை​யும், தீபக் ஹூடா 3 ஆட்​டங்​களில் 7 ரன்​களை​யும், விஜய் சங்​கர் 4 ஆட்​டங்​களில் 109 ரன்​களை​யும், ஷிவம் துபே 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 137 ரன்​களை​யும் எடுத்​துள்​ளனர்.

மேலும் இளம் வீரர்​களுக்கு வாய்ப்பு கொடுக்க ஏன் சிஎஸ்கே தயங்​கு​கிறது என்ற கேள்​வி​யும் எழுந்​துள்​ளது. ஆனால் சிஎஸ்கே அணி​யில் உள்ள இளம் வீரர்​களில் ஆந்த்ரே சித்​தார்த், வன்ஷ் பேடி, ஷேக் ரசீத் ஆகியோர் மட்​டுமே பேட்​ஸ்​மேன்​கள். ஸ்ரே​யாஷ் கோபால் சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக​வும், அன்​ஷுல் கம்​போஜ் வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக​வும் உள்​ளனர். குர்​ஜப்​னீத் சிங் இடது கை மிதவேகப்​பந்து வீச்​சாள​ராக அறியப்​படு​கிறார்.

கமலேஷ் நாகர்​கோட்டி வேகப்​பந்து வீச்​சாள​ராக உள்​ளார். இதில் ஆந்த்ரே சித்​தார்த் டி20 போட்​டிகளில் விளை​யாடியதே இல்​லை. வன்ஷ் பேடி ஒரே ஒரு டி20 ஆட்​டத்​தில் மட்​டுமே விளை​யாடி உள்​ளார். ஷேக் ரஷீத், குர்​ஜப்​னீத் சிங் ஆகியோ​ருக்​கும் பெரிய அளவில் அனுபவம் இல்​லை. ஸ்ரே​யாஷ் கோபால், கமலேஷ் நாகர்​கோட்டி ஆகியோர் அதிக அளவி​லான உள்​ளூர் போட்​டிகளில் விளை​யாடி உள்ள போதி​லும் பெரிய அளவி​லான தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யது இல்​லை. இதன் காரண​மாகவே சிஎஸ்கே அணி இளம் வீரர்​கள் மீது பாரா​முக​மாக இருக்​கிறதோ என்ற கேள்வி​களும் எழாமல் இல்​லை.

இந்​நிலை​யில் கொல்​கத்தா அணிக்கு எதி​ரான போட்​டிக்கு பின்​னர் சிஎஸ்கே பேட்​டிங் பயிற்​சி​யாளர் மைக்​கேல் ஹஸ்ஸி கூறிய​தாவது: எங்​களிடம் சரி​யான வீரர்​கள் உள்​ளனர் என்று நான் இன்​னும் நினைக்​கிறேன். நாங்​கள் அவர்​களிடம் நம்​பிக்​கை​யை​யும் நிலைத்​தன்​மை​யை​யும் கண்​டு​பிடிக்க முயற்​சிக்க வேண்​டும். அதிலிருந்து நாங்​கள் பேட்​டிங், பந்து வீச்​சு, பீல்​டிங் ஆகிய​வற்றை வளர்க்​க​வும், கட்​டமைக்​க​வும் முடி​யும் என்று நம்​பு​கிறோம். நாங்​கள் விளை​யாடும் ஸ்டைல் குறித்து நிறைய பேசப்​படு​கிறது. ஆனால் எங்​களிடம் உள்ள வீரர்​களிடம் அவர்​களை முற்​றி​லும் மாறு​பட்ட வழி​யில் விளை​யாடு​மாறு கேட்க விரும்​ப​வில்​லை. அவர்​களு​டைய இயல்​பான ஆட்​டத்தை விளை​யாடு​கிறார்​கள். ஐபிஎல் தொடரில் இதற்கு முன்​னர் அவர்​கள் சிறப்​பாக விளை​யாடியதன் காரண​மாகவே தற்​போது இங்கு வந்​துள்​ளனர். நான் நிச்​சய​மாக அவர்​களை வேறு வழி​யில் விளை​யாட வைக்க முயற்சி செய்​பவன் அல்ல.

சிஎஸ்கே அணி​யில் உள்ள பல வீரர்​கள் தங்​களது கிரிக்​கெட் வாழ்க்​கை​யின் உச்​சகட்​டத்தை கடந்​து​விட்​ட​தாக விமர்​சிக்​கப்​படு​கிறது. ஆனால் இதை நான் ஏற்​றுக்​கொள்​ள​மாட்​டேன். அவர்​கள் இதற்கு அப்​பாற்​பட்​ட​வர்​கள். தங்​களது கிரிக்​கெட் வாழ்க்​கை​யில் அந்​திம காலத்​தில் இருந்த வீரர்​கள் சிஎஸ்​கேவுக்கு வந்து கடந்த காலங்​களில் சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளனர். இந்த நேரத்​தில் ஷேன் வாட்​சன், அஜிங்க்ய ரஹானே ஆகியோரை நினை​வு கூர்கிறேன். அவர்​கள், சிஎஸ்​கேவுக்​காக சிறப்​பாக செயல்​பட்​டனர். எங்​களிடம் உள்ள வீரர்​கள் இன்​னும் சில நல்ல கிரிக்​கெட்டை அவர்​களுக்கு முன்​னால் வைத்​திருக்​கிறார்​கள். எங்​களுக்கு அவர்​களால் நிறைய வழங்க முடி​யும் என்றே நினைக்​கிறேன்.

இளம் வீரர்​களை பொறுத்​தவரை, அவர்​கள் சிறப்​பாகச் செயல்​படத் தயா​ராக இருக்​கும்​போது அவர்​களைத் தேர்ந்​தெடுக்க விரும்​பு​கிறோம். எங்​களிடம் சில சிறந்த வீரர்​கள் தங்​கள் வாய்ப்​புக்​காகக் காத்​திருக்​கிறார்​கள். அதில் எந்​த​வித சந்​தேக​மும் இல்​லை. அணி​கள் தொடரை வெல்ல முடி​யாத சூழ்​நிலை உரு​வாகும் போதே, இளம் வீரர்​களுக்கு வாய்ப்பு கொடுத்து முயற்​சிக்​கும் போக்கு இங்கு இருக்​கிறது. ஆனால் நாங்​கள் முடிந்​தவரை போட்​டி​யில் முன்​னேற முயற்​சிக்​கிறோம். இன்​னும் நாங்​கள் சரணடைய​வில்லை என்​பதே நிதர்​சனம்.

பிளே ஆஃப் சுற்​றுக்கு நாங்​கள் முன்​னேற வேண்​டு​மா​னால் வெற்றி பெறு​வதற்​கான வழிகளை கண்​டறிய வேண்​டும். ஐபிஎல் போன்ற நீண்ட தொடரில் உத்​வேகம் மிக​வும் முக்​கிய​மானது. நிச்​சய​மாக அந்த உத்​வேகம் எங்​களிடம் தற்​போது இல்​லை. இந்​நிலையை மாற்​றி, நம்​பிக்​கையை பெற்று சில வெற்​றிகளை குவித்​தால் தன்​னம்​பிக்கை அதி​கரிக்​கும். இது நிகழும் பட்​சத்​தில் பிளே ஆஃப் நெருங்​கும் போது கடைசி அணி​யாக எங்​களால் நுழைய முடி​யும்.

பந்து வீச்​சு, பேட்​டிங், பீல்​டிங் என அனைத்து துறை​யிலும் எதிர்​பார்ப்​புக்கு கீழேயே நாங்​கள் இருக்​கிறோம். ஆனால் அவற்​றில் இருந்து முழு​மை​யாக வில​கி​விட​வில்​லை. முன்​னேற்​றம் அடைய வேண்​டிய பகு​தி​களை கண்​டறிந்து முடிந்​தவரை விரை​வாக நாங்​கள் மீண்​டு ​வர​வேண்​டும். அதிக அளவி​லான மாற்​றங்​களை மேற்​கொள்​வது கடந்த காலங்​களில் சிஎஸ்​கே​வின் பண்​பாக இருந்​த​தில்​லை. இதை மேற்​கொண்​டால் விஷ​யங்​கள்​ மேம்​படு​வதற்​கு முன்​பு மோச​மாகி​விடும்​. நாங்​கள்​ கொஞ்​சம்​ சுயபரிசோதனை செய்​ய வேண்​டும்​.

இவ்​வாறு மைக்​கேல்​ ஹஸ்​ஸி கூறி​னார்​.



Read More

Previous Post

குடியரசுத் தலைவருக்கு காலநிர்ணயம் செய்ததற்கு எதிராக விரைவில் சீராய்வு மனு – மத்திய அரசு திட்டம்

Next Post

Gold Rate | தங்கம் விலை ரூ.1 லட்சம் வரை உயருமா அல்லது 30% குறையுமா..? பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

Next Post
Gold Rate | தங்கம் விலை ரூ.1 லட்சம் வரை உயருமா அல்லது 30% குறையுமா..? பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

Gold Rate | தங்கம் விலை ரூ.1 லட்சம் வரை உயருமா அல்லது 30% குறையுமா..? பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin