Last Updated:
Uddhav Thackeray: எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப் போவதாக உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் கொறடா அர்விந்த் சாவந்த் தெரிவித்தார்
உத்தவ் தாக்கரே சிவசேனா அணியில் இருந்து மேலும் ஒரு எம்.பி. ஏக்னாத் ஷிண்டே அணிக்கு தாவியது மகாராஷ்ட்ரா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இச்சூழலில் கடந்த வியாழன்கிழமை நடைபெற்ற உத்தவ் தாக்கரே சிவசேனா அணி எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கட்சியில் மொத்தமுள்ள 9 மக்களவை உறுப்பினர்களில் 3 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப் போவதாக உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் கொறடா அர்விந்த் சாவந்த் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த எம்.பி நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர், தான், ஏக்னாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணைந்ததாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பாபுசாகேப், சஞ்சய் தினா பாட்டீல், சஞ்சய் ஹரிபாபு ஜாதவ், சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக் ஆகிய 4 எம்.பி.க்களும் உத்தவ் தாக்கரே சிவசேனா அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் மேலும் ஒரு எம்.பி. யான ஓம்ராஜே நிம்பால்கரும் உத்தவ் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஏக்னாத் ஷிண்டே அணிக்கு 6 எம்.பி.க்கள் சென்றுள்ளனர்.
உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு… ஷிண்டே அணிக்கு மாறும் எம்.பி.க்கள் – மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்


