உலகத் தமிழருக்கோர் உறவுப்பாலமாய் விளங்கும் ஐபிசி தமிழின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம் வாரீர்” எனும் தொனிப்பொருளில் இரத்த தான முகாம் ஒன்று நடைபெறவுள்ளது.
ஐபிசி தமிழ் வானொலி தனது 29ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் 09.06.2026 அன்று கொண்டாடவுள்ள நிலையில் இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்த தானம் செய்ய விரும்பும் அனைத்து நல்லுள்ளங்களும் எதிர்வரும் 08.06.2026 காலை 9 மணியளவில் ஐபிசி தமிழ் யாழ் கலையகத்திற்கு வந்து இரத்த தானம் செய்யலாம்.
ஐபிசி தமிழ் வானொலி 30ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் உதிரம் கொடுத்து உயிர் காப்போம் நீங்களும் வாரீர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |


