காசா மீது தொடர்ந்து போர் நடத்தி வரும் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களை கொல்ல உணவில் ஆபத்தான மருந்துகளை கலந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசாவில் போர் நடந்து வருவதால் அம்மக்கள் அன்றாட உணவுக்கே அல்லல் படும் நிலையில் ஐ.நா உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகள் உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை காசாவுக்கு வழங்கி வந்தன. சமீபத்தில் அதையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்திய நிலையில் மக்கள் உணவின்றி பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சத்துமாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபத்தான மருந்துகள்
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா அனுப்பிய நிவாரண உதவிகளை காசாவிற்குள் இஸ்ரேல் அனுமதித்தது, அவ்வாறாக வழங்கப்பட்ட சத்துமாவு உள்ளிட்ட பொருட்களில் சில மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. அதை ஆய்வு செய்ததில் அவை உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான மருந்துகள் என கூறப்பட்டது. நேரடியாக மக்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் அவர்களை நோய்களுக்கு உள்ளாக்கவும் இஸ்ரேல் நினைப்பதாக பலரும் குற்றம் சாட்டினர்.
உணவுக்காக அலையும் மக்களை சுட்டுக்கொல்லும் இஸ்ரேல் இராணுவம்
தற்போது காசாவின் அல் பக்கா கடற்கரையோர உணவகப் பகுதியில் பாலஸ்தீன மக்கள் சிலர் உணவு தேடி சென்றபோது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுபோல அதே பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உணவு தேடி வந்து பரிதாபமாக பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் இந்த போக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |