இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயன மூர்த்தியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பல போராட்டங்கள், தடங்கல்கள் மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்த அவரது வாழ்க்கை கதை பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது. சமீபத்தில் ஐநா சபை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார் நாராயன முர்த்தி. இன்று கோடி கோடியாக சம்பாதித்தாலும் ஒரு காலத்தில் தொடர்ந்து 120 மணி நேரம் பட்டினியாக இருந்துள்ளார் மூர்த்தி.
நம்முடைய லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் விடாமுயற்சியும் கடுமையான உழைப்பும் தேவை என்பதை இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது. பல புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து எத்தனையோ கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகள் நாராயன மூர்த்தியை தேடி வந்தன. ஆனால் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் தன்னுடைய லட்சியத்தை நோக்கி பயணம் செய்வதில் பிடிவாதமாக இருந்தார். அவருடைய இலக்கில் எவ்வுளவு அர்ப்பணிப்போடும் தீர்க்கமாகவும் இருந்தார் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை. அவருடைய அசாத்தியமான வாழ்க்கை இன்றும் உலகில் உள்ள கோடிக்கணக்கான நபர்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் நம்பிக்கையும் அளித்து வருகிறது.
உலகம் முழுதும் பிரபலமாக அறியப்படும் நாராயன மூர்த்தியை லட்சக்கணக்கானோர் தங்களது ரோல்மாடல்களாக கருதுகின்றனர். கான்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஐஐடி-யில் முதுகலை பொறியியல் படிப்பை நிறைவு செய்த மூர்த்தியை தேடி பல வேலைகள் வந்தன. ரத்தன் டாடாவின் ஏர் இந்தியா, TELCO மற்றும் TISCO போன்ற பிரபலமான நிறுவனங்களில் இருந்தெல்லாம் இவருக்கு வேலைவாய்ப்புகள் வந்தது. இவருக்கோ இதில் எந்த நிறுவனத்திலும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமே இல்லை. இதனால் முடிவெடுப்பதில் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அஹமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-ல் தலைமை சிஸ்டம் புரோகிராமராக பணியில் சேர்ந்தார் நாராயன மூர்த்தி. அதற்கு காரணம் இந்தியாவில் முதல்முறையாக ஐஐஎம்-அஹமதாபாத் ஷேரிங் சிஸ்டத்தை நிறுவியிருந்தது. தன்னுடைய லட்சியத்தையும் கனவுகளையும் அடைய கிடைத்த தனித்துவமான வாய்ப்பு என இதை கருதினார் மூர்த்தி. அதனால்தான் உடனடியாக இங்கு பணியில் சேர்ந்தார்.
Also read |
சிறு வயதில் வீடு வீடாக பினாயில் விற்றவர், இன்று வளைகுடா நாட்டின் மசாலா கிங்; யார் இந்த தனஞ்சய் தாதர்?
புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் எழுத்தாளரான சுதா மூர்த்தி இவரது மனைவியாவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அதில் மகள் அக்ஷதா மூர்த்தியை இங்கிலாந்தின் தற்போதைய பிரதமர் ரிஷி ஷுனாக் திருமணம் செய்துள்ளார். திருமணமான புதிதில் ஒருமுறை டிக்கெட் கூட எடுக்காமல் ரயிலில் 11 மணி நேரத்திற்கு மேல் தனது மனைவி சுதா மூர்த்தியோடு பயணம் செய்துள்ளார். ஆனால் இன்றோ நாராயன மூர்த்தி தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,00,000 கோடியாகும். நாராயன மூர்த்தியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.37,000 கோடி என ஃபோர்பஸ் பத்திரிக்கை கூறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…